இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் உலக அமைதியை வலியுறுத்தும் 10 திரைப்படங்கள் காந்தி பதக்கத்திற்குப் போட்டி
கோவாவில் நடைபெறும் 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா, திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் ஒலி ஒளி தகவல் தொடர்புக்கான சர்வதேச கவுன்சிலுடன் (ஐசிஎப்டி) இணைந்து, அமைதி மற்றும் சகிப்புத்தன்மை போன்ற யுனெஸ்கோ இலட்சியங்களை நிலைநிறுத்தும் படங்களுக்கு வழங்கப்படும் யுனெஸ்கோ காந்தி பதக்கத்திற்கான போட்டியை நடத்துகிறது.
இந்த ஆண்டு, இங்கிலாந்து, நார்வே, கொசோவோ, ஈராக், சிலி, ஜப்பான் மற்றும் இந்தியாவில் இருந்து மூன்று படங்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து பத்து சிறந்த திரைப்படங்கள் இந்தப் பதக்கத்திற்காகப் போட்டியிடுகின்றன. 'தன்வி தி கிரேட்', 'விமுக்த்' மற்றும் 'ஒயிட் ஸ்னோ' ஆகிய இந்தியப் படங்களும் பட்டியலில் உள்ளன.
இந்த போட்டிக்கான யுனெஸ்கோ நடுவர் குழுவுக்கு அல்ஜீரியாவைச் சேர்ந்த டாக்டர் பேராசிரியர் அஹமது பெட்ஜோவி தலைமை தாங்குகிறார்.
கவுன்சிலின் கவுரவ பிரதிநிதி மனோஜ் கடாம்ஹ் பேசுகையில், மனிதநேய விழுமியங்கள் மற்றும் வன்முறையற்ற நல்லிணக்கத்தைக் கொண்டாடும் படங்களை விருது அங்கீகரிப்பதாகத் தெரிவித்தார். இது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுடன் ஐசிஎப்டி-ன் 16வது ஆண்டுப் பங்களிப்பு ஆகும்.
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக கலை இயக்குநர் பங்கஜ் சக்ஸேனா கூறுகையில், இந்த விருது அமைதி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் சினிமா மூலம் கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் தனித்துவமான நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195556
(செய்தி வெளியீட்டு எண் 2195556)
***
AD/VK/SH
Release ID:
2195652
| Visitor Counter:
7