இந்திய சர்வதேச திரைப்பட விழா: வடகிழக்கு மாநிலங்களின் திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி
கோவாவில் நடைபெற்றுவரும் 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎஃப்எஃப்ஐ) 8வது நாளில், "புதிய வடகிழக்கு திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கல்வி நிறுவனங்கள்" என்ற தலைப்பில் ஒரு குழு விவாதம் நடைபெற்றது. இந்த அமர்வு, பிராந்தியத்தின் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் கதை சொல்லும் மரபுகளை வடிவமைப்பதில் திரைப்பட கல்வி நிறுவனங்களின் மாற்றத்தக்க பங்கை எடுத்துக்காட்டியது. வடகிழக்கைச் சேர்ந்த முக்கிய ஆளுமைகள், பிராந்தியத்தில் திரைப்படங்களின் வளர்ந்து வரும் சூழல் குறித்த தனிப்பட்ட பயணங்கள், அனுபவங்கள் மற்றும் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கலந்துரையாடலை மெகாலயாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் டொமினிக் சங்மா நெறிப்படுத்தினார். மணிப்பூரைச் சேர்ந்த பிரபல திரைப்பட கலைஞர் ஹோபம் பபன் குமார் மற்றும் அசாமிய திரைப்பட கலைஞர்கள் ரீமா போரா மற்றும் மகரிஷி துஹின் காஷ்யப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரைப்பட கல்வி நிறுவனங்கள் திறமைகளை வளர்ப்பதிலும், கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதிலும், வடகிழக்கு திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு உள்ளூர் மற்றும் உலகளவில் எதிரொலிக்கும் திரைப்படங்களை உருவாக்க அதிகாரம் அளிப்பதிலும் இன்றியமையாத பங்கை வகிக்கின்றன என்பது விவாதத்தில் வலியுறுத்தப்பட்டது. வடகிழக்கு கலைஞர்களின் கருத்துக்களை வெகுவாகப் பரப்ப உள்கட்டமைப்பு, வழிகாட்டுதல் மற்றும் தளங்களில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டியது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195382
(Release ID: 2195382)
***
AD/BR/SH
Release ID:
2195629
| Visitor Counter:
3
Read this release in:
Marathi
,
Khasi
,
English
,
Urdu
,
Konkani
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Gujarati
,
Malayalam