இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவில் வேவ்ஸ் பிலிம் பஜார் நிறைவடைந்தது
இந்திய சர்வதேச திரைப்படத் திருவிழாவின் 5-ம் நாளான நவம்பர் 24 அன்று வேவ்ஸ் பிலிம் பஜார் 2025 நிறைவடைந்தது. பல்வேறு பரிமாற்றங்கள், உலகளாவிய ஒருங்கிணைப்புகள் ஆகியவற்றுடன் இது நிறைவடைந்தது. படைப்புத்திறன் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளில், உலக நாடுகளைச் சேர்ந்த வளர்ந்து வரும் திறமையாளர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் ஆகியோரை இந்நிகழ்வு ஒருங்கிணைத்தது.
இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணைச் செயலாளர்கள் டாக்டர் அஜய் நாகபூஷன், டாக்டர் கே கே நிரலா, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு பிரகாஷ் மேக்டம், வேவ்ஸ் பிலிம் பஜார் ஆலோசகர் திரு ஜெரோம் பெலார்ட், திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ்கமார் ஹிரானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சினிமாவுக்கு பெரும் பங்களிப்பு அளித்த பிரபல நடிகர் தர்மேந்திராவின் மறைவுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் நாகபூஷன், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள வேவ்ஸ் பிலிம் பஜார் விரிவாக நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193833
***
AD/IR/KPG/SE
Release ID:
2194903
| Visitor Counter:
7
Read this release in:
Marathi
,
हिन्दी
,
Konkani
,
Manipuri
,
Punjabi
,
Kannada
,
Malayalam
,
Bengali
,
Khasi
,
English
,
Urdu
,
Assamese