பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குருதேக் பகதூர்ஜியின் 350-வது தியாக தினம்: குருக்ஷேத்திரத்தில் பிரதமர் உரை

प्रविष्टि तिथि: 25 NOV 2025 7:06PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் நடைபெற்ற ஸ்ரீ குருதேக் பகதூர்ஜியின் 350-வது ஷஹீதி திவஸ் (தியாக தினம்) நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றினார். காலையில் அயோத்தியிலும் மாலையில் குருக்ஷேத்திரத்திலும் இருப்பதன் மூலம் இந்தியாவின் பாரம்பரியம் சங்கமிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் அயோத்தியில் தர்ம துவஜம் நிலைநாட்டப்பட்ட வேளையில், சீக்கிய சங்கத்திடமிருந்து ஆசிகளைப் பெறும் வாய்ப்பு கிடைத்ததாக பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். குருக்ஷேத்திரத்தின் புண்ணிய பூமியில் நீதியைக் காப்பதே தலையாய கடமை என்று ஸ்ரீ கிருஷ்ணர் போதித்ததை நினைவு கூர்ந்த அவர், குருதேக் பகதூர்ஜியும் உண்மை, நீதி மற்றும் நம்பிக்கையைக் காக்க தமது உயிரைத் தியாகம் செய்தார் எனக் கூறினார்.

முகலாயர்களின் ஆக்கிரமிப்புக் காலத்தில், காஷ்மீர் இந்துக்களைக் கட்டாய மதமாற்றத்திலிருந்து காக்கும் தர்மமாகக் கருதி குரு தேக் பகதூர்ஜி உயிர்த் தியாகம் செய்தார் என்று பிரதமர் விளக்கினார். கொடுங்கோலன் அவுரங்கசீப்பின் கட்டளைக்கும், தனது தோழர்கள் முரட்டுத்தனமாக கொல்லப்பட்டதற்கு மத்தியிலும் அவர் தமது உறுதியிலிருந்து இம்மியளவும் விலகவில்லை. அவரது தியாகத்தின் விளைவாகவே இன்று இந்திய தேசத்தின் வடிவம் நிலைத்து நிற்கிறது என்று கூறி, அவரை 'ஹிந்த் தி சாதர்' எனப் புகழ்ந்தார்.

கடந்த 11 ஆண்டுகளில் தங்கள் அரசு சீக்கியப் பாரம்பரிய விழாக்களையும் தேசிய விழாக்களாகக் கொண்டாடியதை பிரதமர் எடுத்துரைத்தார். கர்த்தார்பூர் வழித்தடப் பணிகள், ஹேம்குந்த் சாஹிப் ரோப்வே போன்ற புனிதத் தலங்களை நவீனப்படுத்தியதையும் அவர் பட்டியலிட்டார். மேலும், சாகிப் ஜாதாக்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் 'வீர் பால் திவஸ்' அனுசரிக்கப்படுவதையும், அவர்களின் வரலாற்றைத் தேசியப் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளதையும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ குரு கோவிந்த் சிங்ஜி மற்றும் மாதா சாஹிப் கவுர்ஜியின் புனிதமான ‘ஜோடா சாஹிப்’ (பாதணிகள்) சீக்கிய சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார். நிறைவாக, இளைஞர்கள் போதைப்பொருளிலிருந்து விலகி, குருதேக் பகதூர்ஜியின் போதனையான அச்சமற்ற வழியில் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி உரையை நிறைவு செய்தார்.

முன்னதாக இந்நிகழ்வில் மத்திய அரசு சார்பில் நினைவு அஞ்சல்தலை மற்றும் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194262

(செய்தி வெளியீட்டு எண் 2194262)

***

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2194381) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam