பிரதமர் அலுவலகம்
அயோத்தியில் ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் கொடி ஏற்றுதல் உத்சவத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
25 NOV 2025 2:18PM by PIB Chennai
நாட்டின் சமூக-கலாச்சார மற்றும் ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிக்கும் வகையில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புனித ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் கொடிக் கம்பத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காவி கொடியை ஏற்றி வைத்தார். கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதையும், கலாச்சார கொண்டாட்டம் மற்றும் தேசிய ஒற்றுமையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதையும் இந்த விழா குறிக்கிறது. இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இன்று அயோத்தி நகரம் இந்தியாவின் கலாச்சார உணர்வின் மற்றொரு உச்சத்தைக் காண்கிறது என்று கூறினார். "இன்று முழு இந்தியாவும் முழு உலகமும் பகவான் ஸ்ரீ ராமரின் அருளால் நிரம்பியுள்ளது" என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒவ்வொரு ராம பக்தரின் இதயத்திலும் தனித்துவமான திருப்தி, எல்லையற்ற நன்றியுணர்வு மற்றும் மகத்தான ஆழ்நிலை மகிழ்ச்சி இருப்பதை எடுத்துரைத்தார். பல நூற்றாண்டுகளின் காயங்கள் குணமடைகின்றன, பல நூற்றாண்டுகளின் வலிகள் முடிவுக்கு வருகின்றன, பல நூற்றாண்டுகளின் உறுதி இன்று நிறைவேறுகிறது என்பதை அவர் வலியுறுத்தினார். இன்று பகவான் ஸ்ரீ ராமரின் கருவறையின் எல்லையற்ற ஆற்றலும், ஸ்ரீ ராமரின் குடும்பத்தின் தெய்வீக மகிமையும் மிகவும் தெய்வீகமான மற்றும் பிரமாண்டமான கோவிலில் இந்த தர்மத்தின் கொடி வடிவத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
“இந்த தர்மக் கொடி வெறும் கொடி அல்ல, இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சியின் கொடி” என்று திரு மோடி கூறினார். அதன் காவி நிறம், அதில் பொறிக்கப்பட்ட சூரிய வம்சத்தின் மகிமை, சித்தரிக்கப்பட்ட புனிதமான ஓம் ஆகியவை ராம ராஜ்ஜியத்தின் மகத்துவத்தை குறிக்கிறது என்று விளக்கினார்.
அயோத்தி என்பது லட்சியங்களை நிறைவேற்றும் பூமி என்று கூறிய பிரதமர், ராமர் கோயிலின் தெய்வீக முற்றம் இந்தியாவின் கூட்டு வலிமையின் உணர்வுத் தளமாகவும் மாறி வருகிறது என்றார்.
நமது ராமர் உணர்ச்சிகள் மூலம் இணைவதாக கூறிய பிரதமர், நாம் ஒரு துடிப்பான சமூகம், வரவிருக்கும் தசாப்தங்கள் மற்றும் நூற்றாண்டுகளை மனதில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வட தமிழ்நாட்டில் உள்ள உத்திரமேரூர் கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்று, அந்தக் காலத்தில் கூட மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தார்கள், ஜனநாயக ரீதியாக ஆட்சி எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விவரிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
லட்சியம், ஒழுக்கம், வாழ்க்கையின் உயர்ந்த தன்மைக்கு ராமர் உதாரணமாக விளங்குகிறார்.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைய வேண்டும், சமூகம் அதிகாரம் பெற வேண்டும் என்றால், நாம் நமக்குள் "ராமரை" எழுப்ப வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தேசம் முன்னேற, அதன் பாரம்பரியத்தில் பெருமை கொள்ள வேண்டும். வரவிருக்கும் பத்து ஆண்டுகளில், அடிமைத்தன மனநிலையிலிருந்து இந்தியாவை விடுவிப்பதே இலக்காக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194034
***
SS/PKV/SH
(रिलीज़ आईडी: 2194296)
आगंतुक पटल : 12