வரலாற்றுச் சிறப்புமிக்க அணிவகுப்புடன் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்
இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா (ஐஎஃப்எஃப்ஐ) 2025 தொடங்கப்படவிருப்பதை முன்னிட்டு தனது சிறப்புமிக்க பயணத்தில் முதல்முறையாக கோவாவின் மக்கள், தெருக்கள் மற்றும் உணர்வை இதுவரை இல்லாத ஒரு கொண்டாட்டத்தில் திருவிழா ஒருங்கிணைத்தது. துடிப்பான கோவா நகரம் முழுவதும் கலைஞர்களால் வண்ணமயமாகக் காணப்பட்டது.
இந்த கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்த கோவா ஆளுநர் திரு பசுபதி அசோக் கஜபதி ராஜு, தலைசிறந்த திரைப்படங்களின் கொண்டாட்டங்கள் புதிய ஒருங்கிணைப்புகள் மற்றும் படைப்பாற்றல் பரிமாற்றத்திற்கான ஆக்கபூர்வமான தளமாக இந்திய சர்வதேச திரைப்பட விழா மாறியுள்ளது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், “பொதுவாக இந்தத் திருவிழா ஷ்யாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டு நமது மாநிலங்களின் பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சாரங்களை காட்சிப்படுத்தும் பிரம்மாண்டமான கலாச்சார திருவிழாவாக தொடங்குகிறது” என்று கூறினார். உள்ளடக்கம், படைப்பாற்றல் மற்றும் கலாச்சாரத்தின் ஆதரவுடன் வளர்ந்து வரும் இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம் குறித்த பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அவர் நினைவுகூர்ந்தார். மும்பையில் நடைபெற்ற உலக ஒலி,ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடான வேவ்ஸ் போன்ற முன்முயற்சிகள் வளர்ந்து வரும் படைப்பாற்றல் திறனை நாடு முழுவதும் மேம்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். கோவாவை இந்திய சர்வதேச திரைப்பட திருவிழாவின் நிரந்தர புகலிடமாக உருவாக்கியதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மறைந்த திரு மனோகர் பாரிக்கருக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
விழாவில் பேசிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை புத்தாக்கத்தின் வழிகாட்டியாக இந்த திரைப்பட விழாவை நிலை நிறுத்துவதற்காக, செயற்கை நுண்ணறிவு திரைப்பட ஹேக்கத்தான் மற்றும் பிரம்மாண்டமான வேவ்ஸ் திரைப்பட பஜார் உள்ளிட்டவை புதிதாக சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், "படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு" என்ற கருப்பொருளைக் கொண்டுள்ள இந்த ஆண்டின் பதிப்பு, உலகளாவிய படைப்பு புரட்சியில் இந்தியாவின் தலைமையை பிரதிபலிக்கிறது, என்று கூறினார். ஐஎஃப்எஃப்ஐ, இந்திய திறமைகளை உலகளாவிய சாத்தியங்களுடன் இணைக்கிறது என்றும், கோவாவை இந்தியாவின் படைப்புத் தலைநகராக மாற்றுவதே தங்கள் கனவு என்றும் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: http://iffipib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192289
(Release ID: 2192289)
***
AD/BR/SH
Release ID:
2192340
| Visitor Counter:
7