கொரியக் குடியரசின் தேசிய சபை உறுப்பினர் ஜேவோன் கிம் வந்தே மாதரப் பாடலை பாடியது பாராட்டுக்குரியது – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
கோவாவில் இன்று தொடங்கிய வேவ்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கொரியக் குடியரசின் தேசிய சபை உறுப்பினர் ஜேவோன் கிம், வந்தே மாதரம் பாடலை உணர்வுபூர்வமாக பாடினார். இது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இது எதிர்பாராத மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்திருந்தது.
இந்தியாவின் தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், இப்பாடலைப் பாடிய தருணம் மிகவும் பொருத்தமானதாக அமைந்திருந்தது. அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் இப்பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சி இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இருந்தது.
தென்கொரியாவைச் சேர்ந்த கிம், வந்தே மாதரம் பாடலை முழுவதுமாக உணர்வுபூர்வமாக பாடிய விதம் பாராட்டுக்குரியது என மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு மற்றும் கலாச்சார நல்லிணக்கத்திற்கு அடையாளமாக திகழ்வதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192117
***
VL/SV/KPG/KR
Release ID:
2192209
| Visitor Counter:
12