பிரதமர் அலுவலகம்
ரஷ்ய அதிபரின் உதவியாளர், பிரதமருடன் சந்திப்பு
இணைப்பு, கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன
அடுத்த மாதம் இந்தியாவில் அதிபர் திரு புதினை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
प्रविष्टि तिथि:
18 NOV 2025 9:05PM by PIB Chennai
ரஷ்ய கூட்டமைப்பின் கடல்சார் வாரியத்தின் தலைவரும், அதிபரின் உதவியாளருமான மாண்புமிகு திரு நிகோலாய் பட்ருஷேவ் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இணைப்பு, திறன் மேம்பாடு, கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் பொருளாதாரம் ஆகியவற்றில் ஒருங்கிணைப்புக்கான புதிய வாய்ப்புகள் உட்பட, கடல்சார் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
ரஷ்ய அதிபர் திரு புதினுக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்திக் கொண்ட பிரதமர், அடுத்த மாதம் இந்தியாவில் அவரை வரவேற்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.
***
(Release ID: 2191450)
AD/BR/KR
(रिलीज़ आईडी: 2191506)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam