பிரதமர் அலுவலகம்
பூடானில், பிரதமரின் பயணத்தையடுத்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை
Posted On:
12 NOV 2025 9:59AM by PIB Chennai
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் அழைப்பின் பேரில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்களில் பூடானில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது 2025 நவம்பர் 11 அன்று சாங்லிமிதாங்கில் நடைபெற்ற 4-ம் மன்னரின் பிறந்ததின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் திரு மோடி கலந்து கொண்டார். திம்புவில் நடைபெற்ற உலகளாவிய அமைதி பிரார்த்தனை திருவிழாவிலும் அவர் கலந்து கொண்டார். இத்திருவிழாவின் போது பொதுமக்களின் வழிபாட்டுக்காக திம்புவில், இந்தியாவிலிருந்து பகவான் புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளதற்காக பூடான் மன்னர் பாராட்டுத் தெரிவித்தார்.
பூடான் மன்னரும், நான்காம் மன்னரும் பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் திரு மோடி, பூடான் பிரதமர் திரு டேஷோ ஷெரிங் டோப்கேவுடன் உரையாடினார். இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் பரஸ்பரம் நலன் சார்ந்த உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
நவம்பர் 10 அன்று தில்லியில் நிகழ்ந்த வெடிச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பூடான் அரசு சார்பாகவும், மக்கள் சார்பாகவும் மன்னர் இரங்கல் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறினார். பூடானின் ஆதரவிற்காக இந்திய தரப்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பூடானின் 13-வது 5 ஆண்டுத் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று திரு மோடி உறுதியளித்தார். தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதற்காகவும், பூடானின் 13-வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு உதவி செய்வதற்காகவும் இந்தியாவிற்கு பூடான் தரப்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
கெலபு மைன்ட்புல்நெஸ் நகரத்திற்காக மன்னரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற இந்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். முதலீட்டாளர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில், அசாமின், ஹடிசரில் குடியேற்ற சோதனை மையம் உருவாக்கப்படும் என்று அவர் அறிவித்தார். கியால்சங்க் அகாடமி கட்டுமானத்திற்காக இந்திய அரசு அளிக்கும் ஆதரவிற்கு மன்னர் பாராட்டுத் தெரிவித்தார்.
2025 நவம்பர் 11 அன்று 1,020 மெகாவாட் திறனுடைய புனாட்சாங்சு-II நீர்மின் திட்டத்தை மன்னரும் பிரதமர் திரு மோடியும் இணைந்து தொடங்கி வைத்தனர். இத்திட்டம் நீர்மின் துறையில், இந்தியா –பூடான் இடையேயான சிறந்த நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை எடுத்துக் காட்டுகிறது. புனாட்சாங்சு-II திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதை அவர்கள் வரவேற்றனர்.
பூடான் அரசின் எரிசக்தி மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகம் மற்றும் இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் இடையே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஒத்துழைப்புக் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189049
***
SS/IR/KPG/KR
(Release ID: 2189244)
Visitor Counter : 6
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam