பிரதமர் அலுவலகம்
தென்கிழக்கு ஆசியாவுக்கான இந்தியாவின் நுழைவாயிலாக வடகிழக்கு இந்தியா எவ்வாறு மாறி வருகிறது என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
09 NOV 2025 11:16AM by PIB Chennai
தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் இயற்கையான நுழைவாயிலாக வடகிழக்குப் பகுதி எவ்வாறு மாறி வருகிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எழுதிய கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
வடகிழக்குப் பகுதியை 'அஷ்டலட்சுமி' என்று சிறப்பித்துக் கூறும் அமைச்சர், அது தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் இயற்கையான நுழைவாயிலாக எவ்வாறு மாறி வருகிறது என்பதை விளக்கியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். வடகிழக்குப் பகுதி இந்தியாவின் எல்லை மட்டுமல்லாமல், அது இப்போது நாட்டின் முன்னேற்றத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது என்பதை அமைச்சர் எடுத்துரைத்துள்ளதாக திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியாவின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த நுண்ணறிவுமிக்க கட்டுரையில், மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா ( @JM_Schindia ) வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றின் அழகையும் அதன் மக்களின் உறுதியான மனப்பான்மையையும் விவரித்துள்ளார்.
வடகிழக்குப் பகுதியை 'அஷ்டலட்சுமி' என்று சிறப்பித்துக் கூறும் அமைச்சர், அது தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் இயற்கையான நுழைவாயிலாக எவ்வாறு மாறி வருகிறது என்பதை விளக்கியுள்ளார். வடகிழக்குப் பகுதி, இந்தியாவின் எல்லை மட்டுமல்ல, அது இப்போது நாட்டின் முன்னேற்றத்தின் அடையாளமாகத் திகழ்கிறது என்பதை அமைச்சர் வலியுறுத்திக் கூறுகிறார்."
***
(Release ID: 2187969)
SS/PLM/RJ
(रिलीज़ आईडी: 2188012)
आगंतुक पटल : 34
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam