தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
இந்திய சர்வதேச திரைப்படவிழா 2025 செய்தி சேகரிப்புக்கு ஊடக அங்கீகாரம் பெறுவதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு
प्रविष्टि तिथि:
05 NOV 2025 5:41PM by PIB Chennai
56-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் செய்தி சேகரிப்பதற்கு ஊடகங்கள் அங்கீகாரம் பெறுவதற்கான கால அவகாசம் இம்மாதம் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத ஊடகவியலாளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஊடகங்கள் அனுமதிக்கான விண்ணப்பங்களை. https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கீகாரம் பெற்றுள்ள ஊடகவியலாளர்கள் இந்த பிரத்யேக திரைப்பட விழா நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், திரையிடப்படும் திரைப்படங்கள், குழு விவாதங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம். இந்தத் திரைப்பட திருவிழா இம்மாதம் 20-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை கோவா தலைநகர் பனாஜியில் நடைபெறுகிறது.
கூடுதலாக இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் மத்திய பத்திரிகை தகவல் அலுவலகத்துடன் இணைந்து இம்மாதம் 18-ம் தேதி பனாஜியில் திரைப்பட மதிப்பீட்டு பாடங்களை நடத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186678
****
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2187154)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Gujarati
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam