தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வேவ்ஸ் கண்காட்சியில் பங்கேற்க புத்தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
Posted On:
06 NOV 2025 12:32PM by PIB Chennai
கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்படவிழாவில், வேவ்எக்ஸ் சார்பில் பிரத்யேகமாக புத்தொழில் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள வேவ்ஸ் அரங்குகளை முன்பதிவு செய்து கொள்வதற்கான அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அனிமேஷன், காட்சி அமைப்புகள், விளையாட்டு, காமிக்ஸ், மெய்நிகர் காட்சி அமைப்புகள் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் வளர்ந்து வரும் புத்தொழில் நிறுவனங்களுக்கான தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டும் திரைப்படத்துறையில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள நாடுகள், முதலீட்டாளர்கள் மற்றும் தயாரிப்பு அரங்குகளுடன் தொடர்பு ஏற்படுத்தும் வகையிலும் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மாதம் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில் உலகம் முழுவதிலுமிருந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஊடகத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கண்காட்சியில் அரங்குகள் அமைப்பதற்கு கட்டணமாக தலா 30,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இரண்டு பிரத்யேக நுழைவுச் சீட்டு, மதிய உணவு, தேநீர், மாலையில் வலைதள வாய்ப்பு மற்றும் இந்தத் திரைப்படவிழாவில் திரையிடப்படும் சர்வதேச திரைப்படங்களை பார்வையிடுவதற்கும், ஊடகம் மற்றும் தொழில்சார்ந்த வல்லுநர்களுடன் நேரடி சந்திப்பிற்கும் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186864
***
SS/SV/KPG/SH
(Release ID: 2187098)
Visitor Counter : 6
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam