பிரதமர் அலுவலகம்
ஆரோக்கியமான பெண்கள், வலுவான குடும்பம் என்ற இயக்கத்தின் கீழ் மூன்று கின்னஸ் உலக சாதனைகளுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2025 2:16PM by PIB Chennai
ஆரோக்கியமான பெண்கள், வலுவான குடும்பம் என்ற இயக்கத்தின் கீழ் மூன்று கின்னஸ் உலக சாதனைகள் படைத்துள்ளதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த சாதனை குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர், இதுபோன்ற முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை என்று குறிப்பிட்டுள்ளார். இது போன்ற மக்கள் இயக்கங்கள் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அரசின் முயற்சிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கின்றன என்றும், பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியப்பதாவது;
“இது மிகவும் பாராட்டத்தக்கது! இதுபோன்ற மக்கள் இயக்கங்கள் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான அரசின் முயற்சிகளுக்கு உத்வேகம் அளிப்பதுடன், நாட்டில் உள்ள பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.”
***
(Release ID: 2185122)
AD/SV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2185294)
வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
Bengali-TR
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam