பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற ஒற்றுமைதின அணிவகுப்புக் குறித்த கண்ணோட்டத்தை பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
प्रविष्टि तिथि:
31 OCT 2025 1:30PM by PIB Chennai
குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற ஒற்றுமைதின அணிவகுப்புக் குறித்த கண்ணோட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
“கெவாடியாவில் நடைபெற்ற ஒற்றுமைதின அணிவகுப்பில் கலந்து கொண்டது சிறப்பு வாய்ந்தது. இந்த அணிவகுப்பு சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினத்தையொட்டி இந்தியாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை எடுத்துக் காட்டும் வகையில் நடைபெற்றது.
உள்நாட்டு நாய் இனங்களின் சாகச நிகழ்ச்சிகளும் இந்த ஒற்றுமை தின பேரணியின் ஒரு பகுதியாக இடம் பெற்றிருந்தது, அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாகவும் இருந்தது.
ஒற்றுமைதின பேரணியின் ஒரு பகுதியாக நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிகளும் காணக் கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது.”
------
(Release ID: 2184534)
SS/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2184745)
आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada