ரெயில்வே அமைச்சகம்
மோன்தா புயல் எச்சரிக்கையையொட்டி மேற்கொள்ளப்படும் தயார் நிலை குறித்து மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
Posted On:
28 OCT 2025 4:09PM by PIB Chennai
மோன்தா புயல் எச்சரிக்கையையொட்டி மேற்கொள்ளப்படும் தயார் நிலை குறித்து மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று ஆய்வு செய்தார். காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்குக் கடற்கரையையொட்டிய ரயில்வே கட்டமைப்பில் தயார் நிலை குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு, ரயில் இயக்கம், மறுசீரமைப்புத் திட்டமிடல், உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை முகமைகளுடன் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான நடைமுறைகள் குறித்து மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார். புயல் தாக்கத்தையொட்டிய அனைத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு, குறிப்பாக ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கிழக்குக் கடற்கரையையொட்டிய பகுதிகளில் இப்பணிகளை மேற்கொள்ளுமாறு ரயில்வே அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
இடையூறு இல்லாத தொலைத்தொடர்பு சேவையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், உரிய நேரத்தில் பேரிடர் மீட்புக் குழுக்கள் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். புயலுக்குப் பிறகு ரயில் சேவைகளை மீண்டும் இயக்குவதில் தயாராக இருக்குமாறு ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183339
***
SS/IR/KPG/KR
(Release ID: 2183419)
Visitor Counter : 17