விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் - மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் ஆய்வு
Posted On:
13 OCT 2025 3:48PM by PIB Chennai
வேளாண்மைத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்திற்கு மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் தலைமை வகித்தார். காரீஃப் பயிர் சூழல், ரபி பருவ விதைத்தல் தயார் நிலை, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் நிலைமை, விலை நிலவரம், உரங்கள் கிடைத்தல், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் போன்றவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மத்திய அமைச்சர் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு காரீஃப் பயிர்கள் மொத்த பரப்பளவில் 6.51 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2024-25-ம் நிதியாண்டில் 1,114.95 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு மொத்த விதைத்தல் இருந்த நிலையில், தற்போது 1,121.46 லட்சம் ஹெக்டேராக உள்ளது. கோதுமை, நெல், மக்காச்சோளம், கரும்பு மற்றும் பருப்பு வகைகள் போன்ற முக்கிய பயிர்களின் விதைப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 2024-25-ம் ஆண்டில் உளுத்தம் பருப்பு சாகுபடி 22.87 லட்சம் ஹெக்டேரில் இருந்து 1.50 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து 2025-26-ம் ஆண்டில் 24.37 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2178449
***
SS/IR/AG/SH
(Release ID: 2178687)
Visitor Counter : 5