பிரதமர் அலுவலகம்
நடிகர் ராம்சரண் மற்றும் திரு அனில் காமினேனி ஆகியோருடனான சந்திப்பின்போது வில்வித்தையை பிரபலமாக்குவதற்கான முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 OCT 2025 9:28PM by PIB Chennai
நடிகர் ராம்சரண், அவரது துணைவி திருமதி உபாசனா கொனிடேலா மற்றும் திரு அனில் காமினேனி ஆகியோரை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார்.
உலகின் முதல் வில்வித்தை பிரீமியர் லீக் போட்டியின் மூலம் வில்வித்தையை ஊக்குவிக்கும் அவர்களது கூட்டு முயற்சியை இந்த சந்திப்பின்போது பிரதமர் பாராட்டினார்.
இது போன்ற முன்முயற்சிகள், வில்வித்தையின் வளமான மாண்புகளை பாதுகாப்பதுடன், ஏராளமான இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
“உங்களையும், உபாசனா மற்றும் அனில் காமினேனி ஆகியோரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வில்வித்தையைப் பிரபலப்படுத்துவதற்கான உங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியவை, ஏராளமான இளைஞர்களுக்குப் பயனளிக்கும்.
@AlwaysRamCharan
@upasanakonidela”
***
(Release ID: 2178209)
SS/BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2178460)
வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam