பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜெய்ப்பூர் மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல்

Posted On: 06 OCT 2025 9:58AM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள  பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

"ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர் @narendramodi"

***

(Release ID: 2175193)

SS/EA/KR


(Release ID: 2175257) Visitor Counter : 8