பிரதமர் அலுவலகம்
ஆரோக்கியமான பெண்கள் வலிமையான குடும்பம் இயக்கத்தை, தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவும், இந்தியாவின் பெண்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்ற களத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களை பிரதமர் பாராட்டியுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 OCT 2025 3:41PM by PIB Chennai
ஆரோக்கியமான பெண்கள் வலிமையான குடும்பம் இயக்கத்தை தாக்கம் ஏற்படுத்தக் கூடியதாகவும், இந்தியாவின் பெண்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்ற களத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டினார்.
இந்த இயக்கத்தை மக்களின் பங்களிப்புக்கு சிறந்த உதாரணம் என்று விவரித்த பிரதமர், வாழ்க்கையை மேம்படுத்தவும், ஆரோக்கியமான, அதிகாரமளிக்கப்பட்ட சமூகத்தை கட்டமைக்கவும், இது போன்ற கூட்டு செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்று வலியுறுத்தினர்.
மத்திய அமைச்சர் திரு ஜே.பி.நட்டாவின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதிலளித்து திரு மோடி குறிப்பிட்டுள்ள தாவது:
“போற்றத்தக்க முயற்சி! நமது பெண்களுக்கு பயனுள்ளதாகவும், மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் மாற்றுவதற்கு அடித்தட்டு அளவில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்க்கையை மேம்படுத்துவதில் மக்களின் பங்களிப்பிற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.”
*****
(Release ID: 2174771)
AD/BR/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2174812)
வருகையாளர் எண்ணிக்கை : 39
இந்த வெளியீட்டை படிக்க:
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam