பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லி சித்தரஞ்சன் பூங்காவில் நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்

மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்விற்காக பிரதமர் பிரார்த்தனை செய்தார்

प्रविष्टि तिथि: 30 SEP 2025 9:24PM by PIB Chennai

மகா அஷ்டமியின் புனித நாளில் தில்லி சித்தரஞ்சன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துர்கா பூஜை கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.

வங்காள கலாச்சாரத்துடனான வலிமையான தொடர்புக்கு சித்தரஞ்சன் பூங்கா பெயர் பெற்றுள்ளது என்று திரு மோடி கூறினார். அங்கு நடைபெறும் கொண்டாட்டங்கள் நமது சமூகத்தின் ஒற்றுமை உணர்வு மற்றும் துடிப்பான கலாச்சாரத்தை தெள்ளத்தெளிவாக பிரதிபலிக்கின்றன என்றார்.

நாட்டு மக்களின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்விற்கு பிரதமர் பிரார்த்தனை செய்தார்.

கொண்டாட்டங்களின் முக்கிய அம்சங்களையும் பிரதமர் பகிர்ந்துள்ளார். தில்லியில் நடைபெற்ற நினைவை விட்டு நீங்காத துர்கா பூஜை கொண்டாட்டங்களின் முக்கிய அம்சங்கள்! மகிழ்ச்சியும் செழிப்பும் எங்கும் நிறைந்திடட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

“மகா அஷ்டமி புனித நன்னாளில் இன்று தில்லியின் சித்தரஞ்சன் பூங்காவில் நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டங்களில் கலந்து கொண்டேன். வங்காள கலாச்சாரத்துடனான வலிமையான தொடர்புக்கு சித்தரஞ்சன் பூங்கா பெயர் பெற்றுள்ளது. அங்கு நடைபெறும் கொண்டாட்டங்கள் நமது சமூகத்தின் ஒற்றுமை உணர்வு மற்றும் துடிப்பான கலாச்சாரத்தை  பிரதிபலிக்கின்றன. அனைவரின் மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்விற்கு பிரார்த்தனை செய்தேன்.”

***

SS/BR/SH

 


(रिलीज़ आईडी: 2173499) आगंतुक पटल : 32
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam