பிரதமர் அலுவலகம்
ஆயுஷ்மான் பாரத்தின் ஏழாம் ஆண்டு தினத்தையொட்டி பிரதமர் கருத்து
Posted On:
23 SEP 2025 12:52PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத்தின் ஏழாம் ஆண்டு தினத்தையொட்டி இன்று கருத்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான குடிமக்களுக்கு மருத்துவ சேவைகளுக்கான எளிதில் அணுகுதல், நிதி பாதுகாப்பு, கண்ணியம் உள்ளிட்டவற்றை உறுதி செய்வதன் மூலம் தரமான உடல்நலத்தை காக்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து மைகவ் இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது:
“இன்று நாம் ஆயுஷ்மான் பாரத்தின் ஏழாம் ஆண்டு தினத்தை கொண்டாடுகிறோம்.! இது எதிர்காலத் தேவைகளை மக்களுக்கு உயர்தரமான மற்றும் எளிதில் அணுகும் வகையில் மருத்துவ சேவைகளை உறுதி செய்வதில் கவனம் செலுத்திய ஒரு முன்முயற்சியாகும். இதன் மூலம், மக்களின் நலனில் இந்தியா ஒரு புரட்சியைக் காண்கிறது. இது நிதிப் பாதுகாப்பையும், கண்ணியத்தையும் உறுதி செய்துள்ளது. இரக்கம், தொழில்நுட்பம் ஆகியவை எவ்வாறு மேலும் மனித சமூகத்திற்கு அதிகாரமளிக்க முடியும் என்பதை இந்தியா காண்பித்துள்ளது.”
***
(Release ID: 2169993)
AD/IR/RJ/SH
(Release ID: 2170342)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam