பிரதமர் அலுவலகம்
பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
प्रविष्टि तिथि:
17 SEP 2025 8:27PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தனது 75வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து குவிந்த எண்ணற்ற வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும், அன்புச் செய்திகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். இந்த அன்பு தமக்கு மேலும் பலத்தையும் ஊக்கத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பி்ரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மக்கள் சக்திக்கு எனது நன்றி. நாடு முழுவதில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்து குவிந்த எண்ணற்ற வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும், அன்புச் செய்திகளுக்கும் நான் உண்மையிலேயே நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அன்பு எனக்கு பலத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. இதற்காக மக்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்”
****
(Release ID: 2167802)
SS/EA/KR
(रिलीज़ आईडी: 2168030)
आगंतुक पटल : 39
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam