பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி தனது பிறந்த தின வாழ்த்துகளுக்காக உலகத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
Posted On:
17 SEP 2025 3:09PM by PIB Chennai
இன்று தமது 75வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகள் தெரிவித்த உலகத் தலைவர்களுக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
கயானா அதிபர் டாக்டர் இர்ஃபான் அலிக்கு அளித்த பதிலில், பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:
"அதிபர் அலி, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியாவிற்கும் கயானாவிற்கும் இடையிலான நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் ஆழமான பிணைப்புகளைப் பிரதிபலிக்கும் உங்கள் அன்பான உணர்வுகளால் நான் நெகிழ்ச்சியடைந்தேன்."
நியூசிலாந்து பிரதமர் திரு கிறிஸ்டோபர் லக்ஸனுக்கு அளித்த பதிலில், பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:
"பிரதமர் லக்ஸன், இதமான வாழ்த்துகளுக்கு நன்றி. நமது நட்பை நான் மிகவும் மதிக்கிறேன். 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047'-க்கான இந்தியாவின் பயணத்தில் நியூசிலாந்து ஒரு முக்கியமான கூட்டாளியாகும்."
ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அந்தோணி அல்பானீஸ்-க்கு அளித்த பதிலில், பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:
"என் நண்பரான பிரதமர் அல்பானீஸ், உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாயக் கூட்டாண்மை மற்றும் நமது மக்களுக்கு இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்த நான் ஆவலுடன் உள்ளேன்."
பூடான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கே-க்கு அளித்த பதிலில், பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:
"பிரதமர் ஷெரிங் டோப்கே, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. பூடானுடனான நமது சிறப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் உள்ளேன்."
டொமினிகா பிரதமர் திரு ரூஸ்வெல்ட் ஸ்கெரிட்டுக்கு அளித்த பதிலில், பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியதாவது:
"பிரதமர் ஸ்கெரிட், உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. டொமினிகாவுடனான நட்பு மற்றும் ஒற்றுமையின் வலுவான பிணைப்புகளை இந்தியா ஆழ்ந்து போற்றுகிறது.”
***
SS/SE/SH
(Release ID: 2167750)
Visitor Counter : 2