பிரதமர் அலுவலகம்
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப் பெரிய கடல்சார் மற்றும் விமானப் போக்குவரத்து மையமாகவும் மாறிவரும் கிரேட் நிகோபார் தீவு திட்டம் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
12 SEP 2025 1:02PM by PIB Chennai
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப் பெரிய கடல்சார் மற்றும் விமானப் போக்குவரத்து மையமாகவும் மாறிவரும், உத்திசார்ந்த, பாதுகாப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கிரேட் நிகோபார் தீவு திட்டம் குறித்து விவரிக்கும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவின், சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்கு பதில் அளித்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகப் பெரிய கடல்சார் மற்றும் விமானப் போக்குவரத்து மையமாகவும் மாறிவரும், உத்திசார்ந்த, பாதுகாப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கிரேட் நிகோபார் தீவு திட்டம் குறித்து மத்திய அமைச்சர் திரு பூபேந்திர யாதவ் விவரித்துள்ளார். பொருளாதாரமும், சுற்றுச்சூழலும், ஒன்றோடொன்று இசைவாக இருப்பதற்கு ஒரு முதன்மையான உதாரணம் என்று இதனை அவர் எடுத்துக் காட்டியுள்ளார்.”
***
(Release ID: 2165915)
AD/SMB/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2165949)
வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam