பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-மொரீஷியஸ் நாடுகளின் கூட்டறிக்கை- சிறப்பு பொருளாதார தொகுப்பு

Posted On: 11 SEP 2025 1:53PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் மொரீஷியஸ் பிரதமர் திரு நவீன் சந்திரா ராம்கூலம் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இருதலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்துள்ளது என்றும், இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-மொரீஷியஸ் நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி புதிய சர் சிவூசாகூர் ராம்கூலம் தேசிய மருத்துவமனை, ஆயுஷ் சீர்மிகு மையம், கால்நடை பள்ளி மற்றும் விலங்குகளுக்கான மருத்துவமனை, ஹெலிகாப்டர் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் மானிய உதவியுடன் இருநாடுகளும் இணைந்து மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. இத்திட்டங்களுக்காக 215 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (1.80 பில்லியன் மொரீஷியஸ் ரூபாய்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மானிய உதவியுடன் கூடிய வங்கிக்கடன்கள் மூலம் எஸ்எஸ்ஆர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய தானியங்கி தட்பவெப்பநிலையை கட்டுப்படுத்தும் உபகரணங்களுடன் கூடிய வளாகம், சாலை கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுப்புறச்சாலையில் 2-ம் கட்டப்பணிகள் மற்றும் துறைமுகங்களுக்கான உபகரணங்களை கொள்முதல் செய்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதற்கென 440 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொரீஷியசில் துறைமுகங்கள் மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டுமானப்பணிகளை மேற்கொள்வது, பாதுகாக்கப்பட்ட கடற்பகுதிகளில் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவ உதவுதல் மற்றும் நடப்பு நிதியாண்டில் 25 மில்லியன் அமெரிக்க டாலர்களை பட்ஜெட் நிதியுதவியாக வழங்குவது உள்ளிட்ட திட்டங்களுக்கு கொள்கை அளவில் இருநாடுகளும் ஒப்பு கொண்டுள்ளதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

(Release ID: 2165598)

AD/SV/AG/KR


(Release ID: 2165683) Visitor Counter : 2