பிரதமர் அலுவலகம்
'2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு' என்ற இலக்கை வலியுறுத்தி, நிதிப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதியை ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
04 SEP 2025 8:55PM by PIB Chennai
அனைவருக்கும் நிதிப் பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதி கிடைப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டில் ஒரு பெரிய முன்னேற்றத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி (#NextGenGST) சீர்திருத்தங்களின் சமீபத்திய கட்டம், ஆயுள் மற்றும் சுகாதார காப்பீடுகளுக்கு குறிப்பிடத்தக்க வரிச்சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் அவை ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவானதாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாறியுள்ளன.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டதாவது, “பல ஆண்டுகளாக, ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதிப் பாதுகாப்பையும் சுகாதார வசதியையும் உறுதிப்படுத்த பாடுபட்டு வருகிறோம். ஆயுள் மற்றும் சுகாதார காப்பீட்டை மேலும் மலிவானதாக்கும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், '2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு' என்ற எங்கள் இலக்கில் மற்றொரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கின்றன. நாம் அனைவரும் இணைந்து ஒரு ஆரோக்கியமான மற்றும் வலிமையான பாரதத்தை நோக்கி நகர்வோம். #NextGenGST” என்று கூறினார்.
***
(Release ID: 2163943 )
AD/SS/EA/KR
(रिलीज़ आईडी: 2165007)
आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Assamese
,
Bengali
,
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Kannada