குடியரசுத் தலைவர் செயலகம்
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 70 பில்லியன் டாலரிலிருந்து 115 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது: குடியரசுத்தலைவர்
प्रविष्टि तिथि:
08 SEP 2025 12:56PM by PIB Chennai
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி 70 பில்லியன் டாலரிலிருந்து 115 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் பவளவிழாவில் பங்கேற்று பேசிய அவர், இந்தக் கவுன்சில், சர்வதேச சந்தைக்கும் இந்திய உற்பத்தியாளர்களுக்கும் இடையே பாலமாக இருப்பதாக கூறினார். உலகளாவிய மதிப்புத் தொடரில் இந்திய தொழில் முனைவோரின் பங்களிப்பை தொடர்ந்து விரிவாக்கம் செய்யுமாறு பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலை அவர் வலியுறுத்தினார். உலக வர்த்தக ஒழுங்கிலும், சர்வதேச பொருளாதார ஒழுங்கிலும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் சூழலில், இந்த அமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
உயர்தரமான பொறியியல் சாதன சேவைகள், குறைந்த செலவிலான உற்பத்திப் பொருட்கள் ஆகியவை இந்தியாவின் பலமாக விளங்குகிறது என்று குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், நாட்டில் கிடைக்கின்றன திறனுக்கும், சக்திக்கும் உரிய சூழல் அமைப்பை வழங்குவதன் மூலம், புத்தாக்கப் பொருளாதாரத்தில் இந்தியாவை தலைமைப் பெறச் செய்வதற்கு இந்தக் கவுன்சிலின் பங்குதாரர்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2164576
-----
SS/SMB/KPG/KR
(रिलीज़ आईडी: 2164744)
आगंतुक पटल : 11