பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-சிங்கப்பூர் கூட்டறிக்கை

प्रविष्टि तिथि: 04 SEP 2025 8:04PM by PIB Chennai

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் மாண்புமிகு திரு லாரன்ஸ் வோங்-ன் பயணத்தின் போது, இந்தியா மற்றும் சிங்கப்பூரிடையே விரிவான உத்திசார் கூட்டண்மைக்கான செயல்திட்டம் குறித்த கூட்டறிக்கை

 

இந்திய பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், சிங்கப்பூர் குடியரசின் பிரதமர் மேதகு திரு லாரன்ஸ் வோங், செப்டம்பர் 2-4 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார்.

 

செப்டம்பர் 4, 2025 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியும் சிங்கப்பூர் பிரதமர் திரு வோங் அவர்களும் பலதரப்பு விஷயங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து தலைவர்கள் முன்னிலையில் ஏராளமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் திரு மோடி அளித்த மதிய விருந்தில் சிங்கப்பூர் பிரதமர் கலந்து கொண்டார். குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவையும் திரு வோங் சந்தித்துப் பேசினார். மேலும் ராஜ் காட்டில்  மகாத்மா காந்திக்கு அவர் மலரஞ்சலி செலுத்தினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெயசங்கர், பிரதமர் திரு வோங்குடன் கலந்துரையாடினார்.

 

இந்தியா,சிங்கப்பூர் இடையேயான தூதரக உறவுகள் தொடங்கியதன் 60-வது ஆண்டு விழா இந்த வருடம் கொண்டாடப்படுகிறது. நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்துள்ள இந்தியா மற்றும் சிங்கப்பூரின் நீண்ட கால நட்பின் பாரம்பரியத்தையும், பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள விரிவான ஒத்துழைப்பையும் இருநாட்டு பிரதமர்களும் பாராட்டினார்கள். 2024 செப்டம்பரில் பிரதமர் திரு மோடியின் அதிகாரப்பூர்வ சிங்கப்பூர் பயணம், 2025 ஜனவரியில் சிங்கப்பூர் குடியரசுத்தலைவர் திரு. தர்மன் சண்முகரத்னத்தின் அரசுமுறை இந்திய பயணம் மற்றும் ஆகஸ்ட் 2025-ல் புதுதில்லியில் நடைபெற்ற 3வது இந்திய-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசைக் கூட்டம் போன்ற சமீபத்திய உயர்மட்ட செயல்பாடுகள் மூலம் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர்கள் ஆய்வு செய்து தங்கள் திருப்தியை வெளிப்படுத்தினார்கள். அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்பம், கல்வி, மக்களிடையேயான கலாச்சார ஒற்றுமை உள்ளிட்ட துறைகளில் முழுமையான ஒத்துழைப்பு எட்டப்பட்டுள்ளது.

 

கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பிரதமர் திரு மோடியின் அதிகாரப்பூர்வ சிங்கப்பூர் பயணத்தின் போது இரு தரப்பு உறவுகளை  விரிவான உத்திசார் கூட்டாண்மையாக மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதை இரு நாடுகளின் பிரதமர்களும் நினைவு கூர்ந்தனர்இதன் அடிப்படையில், இருதரப்பு உறவுகளின் அடுத்த கட்டத்திற்கான தொலைநோக்குப் பார்வை மற்றும் திசையை அமைக்கவும், எட்டு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் உத்திசார் கூட்டண்மைக்கான எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட முக்கிய  செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஒத்துழைப்பை மேம்படுத்தும் எட்டு துறைகள் பின்வருமாறு: (i) பொருளாதார ஒத்துழைப்பு; (ii) திறன் மேம்பாடு; (iii) டிஜிட்டல்மயமாக்கல்; (iv) நிலைத்தன்மை; (v) இணைப்பு; (vi) சுகாதாரம் மற்றும் மருத்துவம்; (vii) மக்களிடையேயான கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் (viii) பாதுகாப்பு  ஒத்துழைப்பு.

விரிவான உத்திசார் கூட்டாண்மைக்கான செயல்திட்டம்:

பொருளாதார ஒத்துழைப்பு: புதிய மற்றும் எதிர்காலத் துறைகளில் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்

 

  • வர்த்தகம் மற்றும் முதலீடுகள் குறித்த கூட்டுப் பணிக்குழுவின் வருடாந்திர கூட்டத்தின் மூலம் இரு நாடுகளின் வர்த்தக முன்னுரிமைகளையும் கருத்தில் கொள்வது  மற்றும் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை உருவாக்குவதன் மூலம் இருதரப்பு வர்த்தகம் மற்றும் சந்தை அணுகலை ஆழப்படுத்துதல்;

 

  • இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்குவதில் முன்னேற்றம் காண்பதுடன்,  2025 இல் ஆசியான் இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தின்  குறிப்பிடத்தக்க மதிப்பாய்வை மேற்கொள்வார்கள்;

 

 

  • இந்திய-சிங்கப்பூர் குறைக்கடத்தி கொள்கை பேச்சுவார்த்தையின் கீழ், ஒத்துழைப்பு மூலம் இந்தியாவின் குறைக்கடத்தி தொழில்துறை மற்றும் சூழலியலின் வளர்ச்சியை ஆதரித்தல்; சிங்கப்பூர் நிறுவனங்களுடன் கூட்டாண்மைகளை எளிதாக்குதல்; நெகிழ்தன்மை மிக்க குறைக்கடத்தி விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்துதல்; பரஸ்பர நன்மை பயக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்புகளை ஆராய்தல்; பணியாளர் மேம்பாட்டை ஊக்குவித்தல்; மற்றும் தகவல் பகிர்வு, சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம், நேரடி முதலீடுகள் மற்றும் இந்திய மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கிடையில் சாத்தியமான கூட்டாண்மைகள் மூலம் வணிகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவித்தல்;

 

  • முயற்சிகள் மற்றும் கூட்டாண்மைகளை எளிதாக்குதல், அறிவுசார் பகிர்வு, திறன் பயிற்சி, பசுமை தரநிலைகளை செயல்படுத்துதல், முதன்மை திட்டமிடல் மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றில் அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு உள்ளிட்ட மேம்பட்ட உற்பத்தி திறன்களுடன் நிலையான தொழில்துறை பூங்காக்கள் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்துறை பூங்காக்களை கூட்டாக உருவாக்குதல்;

 

  • இந்திய-சிங்கப்பூர் மூலதன சந்தை இணைப்பைக் கூட்டாக மேம்படுத்துதல் மற்றும் என்எஸ்இ- ஐஎஃப்எஸ்சி-எஸ்ஜிஎக்ஸ் கிஃப்ட் இணைப்பு போன்ற கூட்டு முயற்சிகளில் நெருங்கிய ஒத்துழைப்பை உருவாக்குதல்;

 

 

  • குறிப்பாக இருதரப்பு ஒத்துழைப்பு திட்டங்களை நிறைவு செய்யும் பகுதிகளில் இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள வணிக சமூகங்களுக்கிடையேயான கூட்டாண்மைகள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இந்திய-சிங்கப்பூர் வணிக வட்டமேசை கூட்டம் மூலம் வணிகங்களுக்கு இடையிலான ஈடுபாட்டை ஆழப்படுத்துதல்;

 

  • இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்-ஸ்பேஸ்) மற்றும் சிங்கப்பூரின் விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அலுவலகம் மற்றும் இரு நாடுகளின் விண்வெளித் தொழில்கள் உட்பட விண்வெளித் துறையில் விண்வெளி கொள்கை மற்றும் சட்டம்பூமியின் கண்காணிப்பு மற்றும் செயற்கைக்கோள் தொடர்பு தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்பாடுகள் போன்ற பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் கூட்டு ஒத்துழைப்பை ஊக்குவித்தல்;

 

  • இந்தியா மற்றும் சிங்கப்பூரின் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் ஈடுபாட்டின் மூலம், இரு தரப்பினரின் வணிகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், சட்டத்திற்குட்பட்டு பூசல்களை தீர்ப்பதற்கான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்;

 

 

திறன் மேம்பாடு: திறன் மேம்பாடு மற்றும் திறன் கட்டமைப்பில் கூட்டு முயற்சி

 

  • தொழில்துறை இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் பாடத்திட்டத்தில் தரங்களின் ஒருங்கிணைப்பு, பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், திறன் சான்றிதழ் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் தரத்தை பராமரிக்க அவ்வப்போது மதிப்பாய்வு மற்றும் மதிப்பீடு செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி,  சென்னையில், மேம்பட்ட உற்பத்திக்கான தேசிய சிறப்பு மையத்தை கூட்டாக உருவாக்குதல், மற்றும் மேம்பட்ட உற்பத்தி, விமானப் போக்குவரத்து மற்றும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மறுசிரமைப்பு  உள்ளிட்ட பரஸ்பர ஈடுபாடுள்ள துறைகளில் திறன் மையங்களை உருவாக்க தனியார் துறையுடன் ஒத்துழைத்தல்;

 

  • தொழில்நுட்ப தொழிற்கல்வி மற்றும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல்; உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையில் தொழில்நுட்பக் கல்வித் துறையில் ஒத்துழைப்பு; பணியாளர்களின் திறனை மேம்படுத்தி, தொடர்பான தகவல் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளுதல்; மாணவர் மற்றும் பணியாளர்களின் பரிமாற்றங்கள்; மாணவர்களுக்கு அனுபவப் பயிற்சிகள் மற்றும் ஆசிரிய தொழில்துறை இணைப்புகளை எளிதாக்குதல், மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல். கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தில் முன்னேற்றத்தை எளிதாக்குவதற்கும் மதிப்பாய்வு செய்வதற்கும் இரு தரப்பினரும் ஒரு கூட்டுப் பணிக்குழுவை நிறுவுவார்கள்;

 

  • சிங்கப்பூர்-அசாம் செவிலியர் திறமைசார்ந்த திறன் ஒத்துழைப்பு போன்று, சிங்கப்பூருடன் மாநில அளவிலான திறன் ஒத்துழைப்பை ஆதரிக்க, சிங்கப்பூர் திறன் சூழலியலுக்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்கனவே உள்ள வலுவான ஒத்துழைப்பை உருவாக்குதல்;

 

  • டிஜிட்டல்மயமாக்கல்: டிஜிட்டல் மற்றும் நிதி தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல்

 

  • இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான டிஜிட்டல் நிதி மற்றும் நிதிநுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், அத்துடன் நிதிநுட்ப கூட்டுப் பணிக்குழு மூலம் சைபர் பாதுகாப்பு மற்றும் மூலதன சந்தை இணைப்புகளை வலுப்படுத்துதல்;

 

  • டிஜிட்டல் தீர்வுகளில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளுதல், மேலும் சோதனை முயற்சியிலான திட்டங்கள் மூலம் அவற்றின் செயல்படுத்தலை ஆராய்தல்;

 

  • டிஜிட்டல் துறையில் கூட்டாண்மைகளை எளிதாக்கும் நோக்கத்துடன் இரு தரப்பினரின் புத்தொழில் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவன சூழலியலுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல்;

 

  • சைபர் கொள்கைகள், சிஇஆர்டி-சிஇஆர்டி தகவல் பரிமாற்றம், சைபர் பாதுகாப்பு திறன் மேம்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றில் இருதரப்பு பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்;

 

  • கிஃப்ட் நகரம்-சிங்கப்பூர் ஒத்துழைப்பு தொடர்பாக, இந்தியா மற்றும் சிங்கப்பூரில் உள்ள தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் ஒழுங்குமுறை முகமைகளின் அதிகாரிகள், கட்டமைப்பின் மீதான விவாதங்களைத் தொடங்கவும், கட்டமைப்பு பொருந்தக்கூடிய தரவு வகைகள் போன்ற சாத்தியமான பயன்பாட்டு நிகழ்வுகளை அடையாளம் கண்டு சோதிக்கவும் ஒரு கூட்டுப் பணிக்குழுவைக் கூட்டுதல்;

 

  • டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்த தற்போதைய கூட்டுப் பணிக்குழுவின் கீழ், புதுமை, உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல்;

 

  • வேளாண்மை, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையிலான  தரவுத் தொகுப்புகளை உருவாக்குவதற்கும் தரவு சார்ந்த  செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு நிகழ்வுகளை உருவாக்குவதற்கும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதன் மூலம் செயற்கை நுண்ணறிவு மீதான ஒத்துழைப்பை ஆராய்தல்;

 

  • யுபிஐ-பே நவ் இணைப்பை ஒரு அடித்தளமாகப் பயன்படுத்தி காகிதமில்லாத மற்றும் பாதுகாப்பான எல்லை தாண்டிய வணிக மற்றும் தனிநபர் கொடுப்பனவுகளின் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் அதிகரித்தல்;

 

  • ஒன்றுடன் ஒன்று  இயங்கக்கூடிய மின்னணு லேடிங் மசோதாக்கள் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வர்த்தக நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதை வலுப்படுத்துதல் மற்றும் மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான வர்த்தக ஆவணங்களை எளிதாக்குதல்;

 

  • நிலைத்தன்மை: நிலையான வளர்ச்சி மற்றும் பசுமை வர்த்தகத்தில் ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல்

 

  • பசுமை ஹைட்ரஜன் மற்றும் அம்மோனியா உற்பத்தி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட தற்போதைய மற்றும் புதிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரித்தல்;

 

  • நகர்ப்புற நீர் மேலாண்மைத் துறையில் ஒத்துழைப்பை ஆராய்தல்;

 

  • சிவில் அணுசக்தித் துறையில் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்தல்;

 

  • காலநிலை மாற்றத்தின் சவாலை எதிர்கொள்ள பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6.2-ன் கீழ் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பை நோக்கிச் செயல்படுதல்;

 

  • சிங்கப்பூர் உறுப்பினராக உள்ள சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற தொடர்புடைய பலதரப்பு கட்டமைப்புகளில் பசுமை மற்றும் நிலையான முயற்சிகளில் ஒத்துழைப்பை வழங்குதல்;

 

 

  • இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலும், மூன்றாம் நாடுகளுக்கும் உணவுப் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஏற்றுமதிகளுக்கு நாடுகளின் அளவிலான அங்கீகாரத்தை ஆராய்வது உட்பட, உணவுப் பாதுகாப்பில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல்;

 

  • இணைப்பு: கடல்சார் மற்றும் விமானப் போக்குவரத்து இணைப்பை விரிவுபடுத்துதல்.

 

  • சிங்கப்பூர் துறைமுகம் மற்றும் இந்தியாவில் உள்ள துறைமுகங்களுக்கு இடையே இந்திய-சிங்கப்பூர் பசுமை மற்றும் டிஜிட்டல் கப்பல் போக்குவரத்து வழித்தடத்தை நிறுவுவதை ஆதரித்தல், கடல்சார் இணைப்பை ஆழப்படுத்துதல் மற்றும் பசுமை கடல்சார் எரிபொருள் வழித்தடத்தை நிறுவுவதற்காக பணியாற்றுதல்;

 

  • சிங்கப்பூரின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குதல் உள்ளிட்ட இந்தத் துறைகளில் இந்திய மற்றும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டாண்மைகள் மூலம் இந்தியாவின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளி பராமரிப்பு, பழுதுபார்ப்பு, மறுசிரமைப்பு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல்;

 

  • இரு நாடுகளுக்கும் இடையிலான பயணத் தேவையின் வளர்ச்சியை இரு பிரதமர்களும் அங்கீகரித்தனர், மேலும் விமான இணைப்பை மேம்படுத்த இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவது குறித்து விவாதிக்க இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளையும் ஊக்குவித்தனர்;

 

  • இந்திய விமான நிலையங்களுக்கான விமான நிலைய ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவைகளில் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்வது உட்பட திறன் மேம்பாடு மற்றும் விமான நிலைய மேம்பாட்டில் கூட்டாண்மைகளை ஆராய்தல்;

 

  • விமானத் துறையில் தூய்மையான மற்றும் நிலையான எரிசக்தி தீர்வுகளை ஊக்குவிப்பதற்காக நிலையான விமான எரிபொருள் மீதான ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பினரும் உறுதிபூண்டுள்ளனர்;

 

  • சுகாதாரம் மற்றும் மருத்துவம்: சுகாதாரம் மற்றும் மருத்துவ ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்

 

  • மனிதவள மேம்பாடு, டிஜிட்டல் சுகாதார இடையீடு மற்றும் நோய் கண்காணிப்பு, தாய், சேய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சுகாதாரக் கொள்கை, மருத்துவ தயாரிப்புகளுக்கான அணுகல் மற்றும் கூட்டு ஆராய்ச்சியின் ஒழுங்குமுறை வசதி, தொற்றுநோய் மற்றும் தொற்றா நோய்களை எதிர்த்துப் போராடுதல், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல்;

 

  • சுகாதார ஒத்துழைப்பு குறித்த கூட்டுப் பணிக்குழுவைத் தொடர்ந்து கூட்டுதல்;

 

  • சிங்கப்பூர் மற்றும் அசாம் இடையேயான செவிலியர் திறமைசார்ந்த திறன் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தற்போது நடைபெற்று வரும் செவிலியர் திறன் பயிற்சியில் தகவல் மற்றும் அறிவுசார் பரிமாற்றம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதன் மூலம் செவிலியர் திறன் மேம்பாட்டுத் துறையில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல்;

 

  • கூட்டு தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் சுகாதாரம்/மருத்துவ தொழில்நுட்பங்கள் துறையில் புதிய கூட்டு ஆராய்ச்சி திட்டங்களுக்கு ஆதரவளித்தல்;

 

  • மக்களிடையேயான கலாச்சார பரிமாற்றங்கள்: மக்களிடையேயான  கலாச்சார இணைப்புகளை ஆதரித்தல்

 

  • கடல்சார் பாரம்பரியத்தில் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் ஒத்துழைப்பை ஆராய்வதன் மூலம் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நீண்டகால சமூக, கலாச்சார மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துதல்;

 

  • சிங்கப்பூர்-இந்தியா கூட்டாண்மை அறக்கட்டளையின் கீழ் உள்ள ஈடுபாட்டுத் திட்டங்கள் மற்றும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மூலம் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களின் மாணவர்கள் உட்பட மாணவர் பரிமாற்றங்களை ஊக்குவித்தல் மற்றும் விரிவுபடுத்துதல், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு- தொழில்துறை சிங்கப்பூர் இந்தியா ஆயத்த அறிவாற்றல் திட்டத்தின் கீழ் இந்தியாவை தளமாகக் கொண்ட நிறுவனங்களுடன் சிங்கப்பூர் பயிற்சியாளர்களை இணைத்தல்;

 

  • பரிமாற்றத் திட்டங்கள் மூலம் ஆழமான நாடாளுமன்ற ஈடுபாட்டை ஊக்குவித்தல்;

 

  • ·ஆய்வு வருகைகள் உட்பட மூத்த அதிகாரிகள் அளவில்  பொது சேவை பரிமாற்றங்கள் மற்றும் பயிற்சியை எளிதாக்குதல்;

 

  • பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க தற்காலிக ஆலோசனைகள் உட்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடையே தூதரக விஷயங்களில் வழக்கமான உரையாடலைத் தொடர்தல்;

 

  • இரு நாடுகளிலும் உள்ள சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையே நிலையான ஈடுபாடு மற்றும் தொடர்புகளை ஊக்குவித்தல்;

 

  • கலைஞர்கள், கலைக் குழுக்கள் மற்றும் கண்காட்சிகள் உள்ளிட்ட கலாச்சார பரிமாற்றங்களைத் தொடர்ந்து ஊக்குவித்தல்;

 

 

  • பாதுகாப்பு ஒத்துழைப்பு: பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான உத்திசார் ஒத்துழைப்பு

 

  • பாதுகாப்பு அமைச்சர்களின் உரையாடல் மூலம் இருதரப்பு பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையேயும், பாதுகாப்பு கொள்கை பேச்சுவார்த்தை மூலம் மூத்த பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுக்கு இடையேயும் வழக்கமான சந்திப்புகள் உட்பட, அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் தொடர்ச்சியான பரிமாற்றங்கள் மற்றும் ஈடுபாட்டை ஊக்குவித்தல்;

 

  • பல்வேறு வகைகளில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை பயிற்சிகளின் கூட்டு பயிற்சிகள் மூலம் ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்களைத் தொடர்தல்;

 

  • குவாண்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் மற்றும் ஆளில்லா கப்பல்கள் போன்ற வளர்ந்து வரும் பகுதிகளில் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஆழப்படுத்துதல்;

 

  • கடல்சார் பாதுகாப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பைத் தொடர்வதுடன்,  இந்தோ-பசிபிக் மற்றும் இந்தோ-பசிபிக் பெருங்கடல்கள் முன்முயற்சியில் ஆசியான் கண்ணோட்டத்தின் ஒத்துழைப்பின் கொள்கைகள் மற்றும் பகுதிகளுக்கு ஏற்ப பிராந்திய பாதுகாப்பு கட்டமைப்புகளுக்குள் இணைந்து பணியாற்றுதல்;

 

  • சர்வதேச தொடர்பு அதிகாரிகள் மூலம், அந்தந்த தகவல் இணைவு மையங்களுக்கு இடையே கடல்சார் கள விழிப்புணர்வில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்;

 

  • மலாக்கா ஜலசந்தி ரோந்துப் பணியில் இந்தியாவின் ஆர்வத்தை சிங்கப்பூர் பாராட்டி, அங்கீகரிக்கிறது;

 

  • எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட, அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை மீண்டும் வலியுறுத்துதல்,  ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 தடைகள் குழுவால் தடைசெய்யப்பட்டவை உட்பட உலகளாவிய மற்றும் பிராந்திய பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும், பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராகவும், இருதரப்பு வழிமுறைகள், நிதி செயல்பாட்டு பணிக்குழு மற்றும் பிற பலதரப்பு தளங்கள் மூலம் போராட ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்;

 

  • குற்றவியல் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை எளிதாக்கும் இருதரப்பு பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்;

 

  • சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்திற்கும் இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையிலான வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் மூலம் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை தொடர்ந்து மதிப்பாய்வு செய்தல்;

 

  • விரிவான உத்திசார் கூட்டாண்மையை செயல்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றத்தை ஆண்டுதோறும் கண்காணிப்பதற்கான ஒரு முன்னணி வழிமுறையாக இந்திய-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை மாநாட்டை நிறுவனமயமாக்க இரு பிரதமர்களும் ஒப்புக்கொண்டனர்.

 

****

(Release ID: 2163890)
AD/PKV/SG

 


(रिलीज़ आईडी: 2164311) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam