குடியரசுத் தலைவர் செயலகம்
தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசு தலைவர் வழங்கினார்
Posted On:
05 SEP 2025 2:20PM by PIB Chennai
புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், நாடு முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு தலைவர், உணவு, உடை மற்றும் தங்குமிடம் போலவே, ஒரு நபரின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பிற்கு கல்வியும் அவசியம் என்று கூறினார். குழந்தைகளிடையே கண்ணியம் மற்றும் பாதுகாப்பு உணர்வை வளர்க்க விவேகமுள்ள ஆசிரியர்கள் பாடுபடுகின்றனர் என்று கூறினார். தாம் ஒரு ஆசிரியராக இருந்த காலம் தமது வாழ்க்கையின் மிகவும் அர்த்தமுள்ள காலம் என்று அவர் தெரிவித்தார்.
கல்வி ஒரு நபரை திறமையானவராக்குகிறது என்று குடியரசு தலைவர் கூறினார். ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள், கல்வியின் சக்தியால் முன்னேற்றத்தின் உச்சத்தைத் தொட முடியும். அன்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்கள் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு வலிமை சேர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று அவர் கூறினார்.
பெண்களின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் வலியுறுத்தினார். பெண்களுக்கு கல்வி வழங்குவதன் மூலம், நமது குடும்பம், சமூகம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் விலைமதிப்பற்ற முதலீட்டைச் செய்கிறோம். பெண்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதே பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான மிகவும் பயனுள்ள வழி என்று அவர் கூறினார். தேசிய கல்விக் கொள்கை 2020, கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயாக்களை விரிவுபடுத்துவதையும், பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த சிறுமிகளுக்கு சிறப்பு கல்வி வசதிகளை வழங்குவதையும் ஊக்குவிக்கிறது என்று தெரிவித்தார். கல்வி சார்ந்த எந்தவொரு முயற்சியின் வெற்றியும் ஆசிரியர்களைப் பொறுத்தே அமையும். பெண் குழந்தைகளின் கல்விக்கு எந்த அளவுக்கு பங்களிக்கின்றனரோ, அந்த அளவுக்கு ஆசிரியர்களின் பணி அர்த்தமுள்ளதாக அமையும் என்று அவர் கூறினார். ஒப்பீட்டளவில் கூச்ச சுபாவமுள்ள அல்லது குறைந்த சலுகை பெற்ற பின்னணியில் இருந்து வரும் பெண்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தேசிய கல்விக் கொள்கை இந்தியாவை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குடியரசு தலைவர் கூறினார். இதற்காக, நமது ஆசிரியர்கள் உலகின் சிறந்த ஆசிரியர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும். நமது கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களும், பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் திறன் கல்வி ஆகிய மூன்று துறைகளிலும் தீவிரமாகப் பங்களிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார். நமது ஆசிரியர்கள் தங்கள் முக்கிய பங்களிப்பின் மூலம் இந்தியாவை உலகளாவிய அறிவுசார் வல்லரசாக நிலைநிறுத்துவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
******
(Release ID: 2164166)
AD/PKV/SG
(Release ID: 2164246)
Visitor Counter : 2
Read this release in:
English
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam