உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மணிப்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மக்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும்: குக்கி-சோ கவுன்சில்

Posted On: 04 SEP 2025 1:43PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சகம், குக்கி – சோ கவுன்சிலிடம் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகளையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை எண்-2-ஐ மக்கள் பயன்பாட்டிற்காகவும், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவும் திறந்து விடுவது என முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலைப் பகுதியில் அமைதியைப் பராமரிப்பதற்கு மத்திய அரசால் பணியமர்த்தப்பட்ட பாதுகாப்புப் படையினருடன் ஒத்துழைப்பதென குக்கி-சோ கவுன்சில் உறுதி அளித்துள்ளது.

இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம், மணிப்பூர் மாநில அரசு மற்றும் குக்கி தேசிய அமைப்பு, ஒருங்கிணைந்த மக்கள் முன்னணி, ஆகியவற்றுடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் புதுதில்லியில் நடைபெற்றது. இதனையடுத்து, அப்பகுதியில், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்காக முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இன்று முதல் ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்.  இதன் மூலம் மணிப்பூர் மாநிலத்தில் ஒருமைப்பாடு ஏற்படும். மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திரதன்மை ஏற்படுத்துவதற்கு பேச்சுவார்த்தை மூலம், தீர்வு காண வழி ஏற்படும். மேலும், மோதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 7 முகாம்களை வேறு இடங்களுக்கு மாற்ற குக்கி  தேசிய அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் முன்னணி ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் தங்களது முகாம்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் அவை ஒப்புக் கொண்டுள்ளன. ஆயுதங்கள் அனைத்தும் மத்திய ரிசர்வ் படை அல்லது காவல் படை அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாம்களுக்கு அருகே இடமாற்றம் செய்யவும் வெளிநாட்டவர்களை பட்டியலிலிருந்து நீக்குவதற்கும்  பாதுகாப்புப் படையினர் நேரடி சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் இந்த அமைப்புகள் ஒப்புக் கொண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163644

***

SS/SV/KPG/KR/DL


(Release ID: 2163847) Visitor Counter : 2