பிரதமர் அலுவலகம்
இந்திய அஞ்சல் துறை உலகின் மிகப் பெரிய வங்கி கட்டமைப்பாக உருவெடுத்துள்ளது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
04 SEP 2025 12:04PM by PIB Chennai
இந்திய அஞ்சல் துறை எவ்வாறு மாபெரும் வங்கி கட்டமைப்பாக உருவெடுத்துள்ளது என்பதை குறித்து, மத்திய அமைச்சர் திரு ஜோதிராத்திய சிந்தியா எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். அஞ்சலக வங்கிகள், வீடுகளுக்கே நேரடியாக வங்கிச் சேவைகளை வழங்குவதுடன் கண்ணியம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றையும் உறுதி செய்வதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் திரு ஜோதிராத்திய சிந்தியா எழுதியுள்ள கட்டுரையை பகிர்ந்துள்ள பிரதமர், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மத்திய அரசு முன் எப்போதும் இல்லாத வகையில் மேற்கொண்டு வரும் முயற்சிகள், நமது அஞ்சல் துறை ஊழியர், நிதிசார் உள்ளடக்கத்திற்கான முன்னோடியாக உருவெடுக்கச் செய்துள்ளது. தற்போது இந்திய அஞ்சல் துறை உலகின் மாபெரும் வங்கிக் கட்டமைப்பாக உருவெடுத்துள்ளதுடன் கண்ணியம் மற்றும் அதிகாரமளித்தலை உறுதி செய்கிறது.”
***
(Release ID: 2163614 )
SS/SV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2163678)
வருகையாளர் எண்ணிக்கை : 28
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam