பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        பாரதத்தின் குறைக்கடத்தி தயாரிப்பில் மாற்றத்திற்கான பயணம் குறித்த கட்டுரையை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                03 SEP 2025 12:24PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய பாரதத்தின் குறைக்கடத்தி  தயாரிப்பில் மாற்றத்திற்கான பயணத்தை  முன்னிலைப்படுத்திய கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார். அதில் செமிகான் இந்தியா உச்சி மாநாடு 2025, இந்தப் பாதையின் தொடர்ச்சியைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டதாவது, "இந்தியாவின் குறைக்கடத்தி  தயாரிப்பில் மாற்றத்திற்கான பயணம் குறித்து மத்திய அமைச்சர் திரு @AshwiniVaishnaw எழுதியுள்ளார். செமிகான் இந்தியா மாநாடு 2025 இந்த பயணத்தின் தொடர்ச்சியை அடையாளப்படுத்துகிறது.
அடுத்த பத்தாண்டுகளில், இந்தியாவின் குறைக்கடத்தி அலகுகள் விரிவடைந்து முதிர்ச்சியடையும்போது, ஒட்டுமொத்த குறைக்கடத்தி மதிப்பு சங்கிலியின் போட்டி மையமாக நம் நாடு உருவெடுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
***
(Release ID: 2163259)
SS/EA/KR
                
                
                
                
                
                (Release ID: 2163405)
                Visitor Counter : 6
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali-TR 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam