பிரதமர் அலுவலகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டிற்கிடையே, மியான்மர் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆணைய தலைவர் திரு மின் ஆங் ஹலைங்குடன் பிரதமர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
31 AUG 2025 4:50PM by PIB Chennai
தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, மியான்மர் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆணையத்தின் தலைவர் மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹலைங்கை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (31.08.2025) சந்தித்தார்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளித்தல், கிழக்கு நோக்கிய கொள்கை, இந்தோ-பசிபிக் கொள்கைகள் ஆகிய இந்திய கொள்கைகளின் ஒரு பகுதியாக, மியான்மருடனான உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.
இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்து, வளர்ச்சி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, எல்லை மேலாண்மை, எல்லை வர்த்தக பிரச்சினைகள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் பல அம்சங்கள் குறித்து விவாதித்தனர். தற்போதைய போக்குவரத்து இணைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் இரு நாட்டு மக்களிடையே அதிக தொடர்புகளை வளர்க்கும் என்றும், இந்தியாவின் கிழக்கு நோக்கிச் செயல்படுதல் என்ற கொள்கையின்படி பிராந்திய ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் இது ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
மியான்மரில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
மியான்மரின் அமைதி நடைமுறைகளை இந்தியா ஆதரிக்கிறது என்றும், பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்றும் அவர் கூறினார். மியான்மரின் வளர்ச்சிக்கான தேவைகளை ஆதரிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதியளித்தார்.
*****
(Release ID: 2162453)
AD/PLM/SG
(रिलीज़ आईडी: 2162483)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Khasi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada