பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி, உக்ரைன் அதிபர் திரு ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் பேச்சு
உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அதிபர் திரு ஜெலென்ஸ்கி தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்
மோதலுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்- அமைதியை விரைவாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகப் பிரதமர் உறுதி
இந்தியா-உக்ரைன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்
இடுகை இடப்பட்ட நாள்:
30 AUG 2025 7:49PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (30.08.2025) உக்ரைன் அதிபர் திரு வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடினார்.
உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தமது கருத்துகளை அதிபர் திரு ஜெலென்ஸ்கி பகிர்ந்து கொண்டார்.
மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதிலும், விரைவில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதிலும் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். இந்த விஷயத்தில் இந்தியா அனைத்து சாத்தியமான ஆதரவையும் வழங்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மீண்டும் உறுதியளித்தார்.
இந்தியா-உக்ரைன் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தையும் இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர். மேலும் பரஸ்பர ஆர்வமுள்ள அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி அவர்கள் விவாதித்தனர்.
தொடர்ந்து தொடர்பில் இருக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
***
(Release ID: 2162333)
AD/SMB/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2162355)
வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam