பிரதமர் அலுவலகம்
இந்தியா - ஜப்பான் மனிதவள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான செயல் திட்டம்
Posted On:
29 AUG 2025 6:54PM by PIB Chennai
5 ஆண்டுகளில் 500,000 பணியாளர்களை இருவழிப் பரிமாற்றம் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது.
2025-ம் ஆண்டு இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டின் போது, இந்திய - ஜப்பான் பிரதமர்கள் தேசிய முன்னுரிமைகளை பூர்த்தி செய்வதை ஒப்புக்கொண்டனர்.
அதன்படி, இந்தியாவிலும் ஜப்பானிலும் உள்ள பொது, தனியார் துறைகள் அடுத்த தலைமுறையில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும் வகையில் பணியாளர் பரிமாற்றத்தை விரிவுபடுத்த முயற்சிக்கும். இத்தகைய முயற்சிகள் பின்வரும் நோக்கங்களுக்கு இலக்காகக் கொள்ளப்படும்:
i. இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு சாத்தியமான திறமையாளர்களை ஈர்ப்பது.
ii. இரு நாடுகளிலும் கூட்டு ஆராய்ச்சி, வணிகமயமாக்கல் பணிகள்.
iii. இந்தியாவில் ஜப்பானிய மொழிக் கல்வியை ஊக்குவித்தல், அத்துடன் எதிர்காலத்திற்கான முதலீடாக இரு வழி கலாச்சார, கல்வி பரிமாற்றங்களை ஊக்குவித்தல்.
iv. திறன் மேம்பாட்டை அதிகரித்து உற்பத்தித் துறையை வலுப்படுத்துதல்
v. ஜப்பானிய நிறுவனங்களுக்கும் இந்திய மாணவர்களுக்கும் இடையேயான தொடர்புகளை வலுப்படுத்துதல்.
இதற்காக, இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக பின்வரும் செயல் திட்டத்தைத் தொடங்குகின்றன. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்குச் செல்லும் திறமையாளர்களின் எண்ணிக்கையை 50,000 ஆக அதிகரிக்க அரசு, தொழில், கல்வித்துறையில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும்.
* அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பானுக்கு இந்திய பொறியியல் வல்லுநர்கள், கல்விப் பணியாளர்களின் பயணத்தை மேம்படுத்துதல்
* அடுத்த 5 ஆண்டுகளில் ஜப்பானுக்கு இந்திய மாணவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்களின் வருகையை மேம்படுத்துதல்.
* குறிப்பிட்ட திறன் கொண்ட பணியாளர் தொழில்நுட்ப பயிற்சித் திட்டம்
* இந்தியாவில் திறன்களை மேம்படுத்துதல், ஜப்பானுக்கு ஏற்ற பணியாளர்களை உருவாக்குதல் ஜப்பானின் நிர்வாக, தொழில்துறை, உற்பத்தித் திறனுக்கு ஏற்ப பணியாளர்களை தயார்படுத்துதல்
* திறன் துறைகளுக்குப் பொருத்தமான ஜப்பானிய மொழிக் கல்வியை ஊக்குவித்தல்
* இந்த செயல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகமும் ஜப்பான் வெளியுறவு அமைச்சகமும் ஒட்டுமொத்தமாகப் பொறுப்பேற்கும். மேலும் இந்த நோக்கத்திற்காக ஆண்டுதோறும் ஆலோசனைகள் நடத்தப்படும்.
****
(Release ID: 2161975)
AD/PLM/RJ
(Release ID: 2162309)
Visitor Counter : 14
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam