பிரதமர் அலுவலகம்
தேசிய விளையாட்டு தினத்தன்று பீகாரின் ராஜ்கிரில் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 போட்டி தொடங்கவிருப்பதை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
28 AUG 2025 8:25PM by PIB Chennai
பீகாரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ராஜ்கிரில் நாளை (ஆகஸ்ட் 29, 2025) ஆடவர் ஹாக்கி ஆசியக் கோப்பை 2025 போட்டி தொடங்கவிருப்பதை முன்னிட்டு, ஆசியா முழுவதிலும் இருந்து இதில் பங்கேற்கும் அணிகள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2025, 20 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் 2025, ஐஎஸ்டிஏஎஃப் செபக் தக்ரா உலகக் கோப்பை 2024 மற்றும் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 போன்ற முக்கிய போட்டிகளை நடத்தி, சமீப காலங்களில் துடிப்பான விளையாட்டு மையமாக முத்திரை பதித்துள்ள பீகார் மாநிலத்தை திரு மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஆகஸ்ட் 29-ம் தேதியான நாளை (தேசிய விளையாட்டு தினம் மற்றும் மேஜர் தியான் சந்த் பிறந்தநாளும் கொண்டாடப்படுகின்றன), பீகாரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ராஜ்கிரில் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பை 2025 போட்டி தொடங்குகிறது. ஆசியா முழுவதிலும் இருந்து இதில் பங்கேற்கும் அனைத்து அணிகள், வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."
"இந்தியா மற்றும் ஆசியா முழுவதும், லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் ஹாக்கி எப்போதும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தொடர், பரபரப்பான போட்டிகள், அசாதாரண திறமைகளின் வெளிப்பாடுகள் மற்றும் எதிர்கால தலைமுறை விளையாட்டு ஆர்வலர்களை ஊக்குவிக்கும் மறக்கமுடியாத தருணங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்."
"ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பை 2025-ஐ பீகார் நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் விஷயம். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2025, 20 வயதிற்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் 2025, ஐஎஸ்டிஏஎஃப் செபக் தக்ரா உலகக் கோப்பை 2024 மற்றும் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 போன்ற முக்கிய போட்டிகளை நடத்தி, சமீப காலங்களில், ஒரு துடிப்பான விளையாட்டு மையமாக பீகார் ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிலையான வேகம், பீகாரின் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு, அடித்தட்டு அளவில் உற்சாகம் மற்றும் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் திறமைகளை வளர்ப்பதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது."
***
(Release ID: 2161676)
AD/RB/DL
(Release ID: 2161711)
Visitor Counter : 9