பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஃபிடே உலகக் கோப்பை போட்டி இந்தியாவிற்கு மீண்டும் வருவதைப் பிரதமர் வரவேற்றுள்ளார்

Posted On: 26 AUG 2025 11:30PM by PIB Chennai

இரண்டு தசாப்தங்களுக்குப் பின் ஃபிடே போட்டி இந்திய மண்ணிற்கு மீண்டும் வருவதைக் குறிக்கும் வகையில், மதிப்புமிக்க ஃபிடே உலகக் கோப்பை 2025-ஐ நடத்த இந்தியா தயாராகி வருவதால், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மிகுந்த பெருமையையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.


சர்வதேச செஸ் கூட்டமைப்பின் எக்ஸ் தளப் பதிவிற்குப் பதிலளித்துப்  பிரதமர் கூறியிருப்பதாவது: 


"இரண்டு தசாப்தங்களுக்குப் பின் மதிப்புமிக்க ஃபிடே உலகக் கோப்பை 2025-ஐ நடத்துவதில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. நமது இளைஞர்களிடையே செஸ் பிரபலமடைந்து வருகிறது. இந்தப் போட்டி மெய்சிலிர்க்கும் பல போட்டிகளைக் காணும் என்றும், உலகெங்கிலும் உள்ள சிறந்த வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன்."

******

AD/SMB/DL


(Release ID: 2161283)