மாநிலங்களவைச் செயலகம்
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வேட்புமனுவை திரும்பப்பெறும் கால அவகாசம் நிறைவு - இருவர் போட்டியிடுவது உறுதியானது
இடுகை இடப்பட்ட நாள்:
27 AUG 2025 3:34PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் 2025 ஆகஸ்ட் 25 அன்று நிறைவடைந்தது. இதையடுத்து குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக இருவர் உள்ளனர்.
1) திரு புச்சிரெட்டி சுதர்சன் ரெட்டி
முகவரி:
8-2-293/82/என்எல், 12-ஏ எம்எல்ஏ மற்றும் எம்பி காலனி, ஜூபிலி ஹில்ஸ் சாலை, எண் 10சி டிஎஸ்எஸ்பி, கிரேட்டர் ஹைதராபாத், தெலங்கானா-500033
2) திரு சி.பி.ராதாகிருஷ்ணன்
முகவரி:
ஜல் பூஷண், ராஜ் பவன்,
வால்கேஷ்வர் சாலை, மலபார் ஹில், மும்பை-400035
குடியரசு துணைத்தலைவர் தேர்தல் 2025-க்கான வாக்குப்பதிவு, 2025 செப்டம்பர் 09 செவ்வாயன்று, புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் எஃப்-101-ல் நடைபெறும். அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5.00 மணிக்கு நிறைவடையும்.
குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாவர். மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களும் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். அவர்களும் தேர்தலில் பங்கேற்க உரிமை உண்டு.
நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத்தலைவர் தேர்தல் 2025-க்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரியும், மாநிலங்களவைச் செயலாளருமான திரு பி.சி. மோடி செய்து வருகிறார்.
வாக்கு எண்ணிக்கை அதே நாளில் (2025 செப்டம்பர் 09) மாலை 6.00 மணிக்குத் தொடங்கி உடனடியாக தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
*****
(Release ID: 2161180)
AD/SMB/PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2161280)
வருகையாளர் எண்ணிக்கை : 47