பிரதமர் அலுவலகம்
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 AUG 2025 1:01PM by PIB Chennai
புனித ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிர்வாகம் உதவி செய்துவருகிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு எனது பிரார்த்தனைகள்."
***
(Release ID: 2161123)
AD/SMB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2161253)
வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam