பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசி மூலம் உரையாடல்

प्रविष्टि तिथि: 13 JUN 2025 11:15PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

இந்த உரையாடலின் போது அந்நாட்டு பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் – ஈரான் நாடுகளிடையேயான சூழல் குறித்தும் அண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் மோடியிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த உரையாடலின் போது தனது கவலையைத் தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்த்ரதன்மையை விரைவில் கொண்டு வரவேண்டியதன் அவசியத்தை அவரிடம் வலியுறுத்தினார்.

இரு தலைவர்களும் தொடர்ந்து ஆலோசனை செய்வதென ஒப்புக் கொண்டனர்.

***

(Release ID:2136295)

AD/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2160451) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam