உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொகுதி மறுசீரமைப்பின் போது தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது: திரு அமித் ஷா உறுதி்

Posted On: 22 AUG 2025 4:42PM by PIB Chennai

நாட்டில் நல்லெண்ணத்துடன் பல கட்சி ஜனநாயக ஆட்சிமுறையை ஏற்றுக் கொண்ட நிலையில், நாடு சுதந்திரம் அடைந்த 30-வது ஆண்டிலிருந்து ஜனநாயக நடைமுறைகளை மாசுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது கவலை அளிப்பதாக உள்ளதென்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சாதி, வாரிசு அரசியல், திருப்திபடுத்தும் அரசியல், நாட்டின் ஜனநாயக நடைமுறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் ஊழல், நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளதுடன், மக்களின் தீர்ப்புகளை நகைப்புக்குரியதாக்கி வருவதாகக் குறை கூறினார்.

மத்தியில் ஸ்த்ரதன்மை இல்லாத ஆட்சிகளால் நீண்டகால கொள்கைகளை வகுப்பதில் நாடு பின்தங்கியிருந்ததாகவும் 2014-ம் ஆண்டில் திரு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட போது, அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கியதாக அவர் கூறினார்.  சாதி அரசியல், வாரிசு அரசியல், திருப்திபடுத்தும் அரசியல் ஆகியவற்றுக்கு மாற்றாக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் ஆட்சியாக அமைந்தது.

வலுவான கொள்கைகளை வகுப்பதன் மூலம், ஊழலை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் வலுவான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். உள்நாட்டு மற்றும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

அனைத்துத் துறைகளிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும், உறுதியான நடவடிக்கைகள் மூலம் ஜிஎஸ்டி போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக இந்தியா உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில், மாவோயிஸ்ட் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதுடன் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவல்களை முறியடித்து உள்நாட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எதிராக அரசு மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தொகுதி மறுசீரமைப்புக் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திரு அமித் ஷா, தமிழ்நாட்டில் இது குறித்து பரப்பப்பட்டு வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறினார். மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027-ம் ஆண்டு நிறைவடையும் என்று அதன் பின்னரே தொகுதி மறுசீரமைப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.  தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது என்று அனைத்து வாக்காளர்களுக்கும் உறுதி அளிப்பதாக திரு அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2159793

------

AD/SV/KPG/DL


(Release ID: 2159875)