நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தவறாக வழிநடத்தும் விளம்பரத்தை வெளியிட்டதற்காக ரேபிடோ ஆன்லைன் பயண சேவை தளத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது
Posted On:
21 AUG 2025 10:36AM by PIB Chennai
நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்கும் மற்றொரு நடவடிக்கையாக தவறாக வழிநடத்தக்கூடிய விளம்பரத்தை வெளியிட்டதற்காகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொண்டதற்காகவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரேபிடோ நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
அத்துடன் “ஐந்து நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ.50 பெறலாம்” என்ற சலுகையை பெற்ற நுகர்வோருக்கு உறுதியளிக்கப்பட்ட ரூ.50 கிடைக்கவில்லையெனில் அத்தொகை மேலும் தாமதம் அல்லது நிபந்தனையின்றி முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
"5 நிமிடங்களில் ஆட்டோ அல்லது ரூ.50 பெறலாம்" மற்றும் "ஆட்டோ உத்தரவாதம்" என்று வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்த ரேபிடோவின் தவறான விளம்பரங்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கவனத்தில் கொண்டது. விரிவான விசாரணைக்குப் பிறகு, இந்த விளம்பரங்கள் தவறானவை என்றும், தவறாக வழிநடத்தக் கூடியது மற்றும் நுகர்வோருக்கு நியாயமற்ற செயல் என்று கண்டறிந்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தவறான விளம்பரங்களை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
2023 ஏப்ரல் முதல் 2024 மே வரை ரேபிடோ நிறுவனத்திற்கு எதிராக 575 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2024 ஜூன் முதல் 2025 ஜூலை வரை 1224 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நுகர்வோர் தங்களுக்கான உதவிக்கு, தேசிய நுகர்வோர் உதவி எண். 1915-ஐ அழைக்கவும். புகார்களைப் பதிவு செய்ய என்சிஎச் (NCH) செயலி அல்லது இணைய தளத்தை பயன்படுத்தவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2158830
***
AD/IR/AG/KR
(Release ID: 2158949)