பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இம்மாதம் 22-ம் தேதி பயணம்

பிரதமர் கயாவில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பல்வேறு துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்கள்: மின்சாரம், சாலை, சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு மற்றும் குடிநீர் விநியோகம்

பீகாரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கிடையே போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில் கங்கை நதியின் கீ்ழ் அமைக்கப்படும் அவுண்டா – சிமாரியா மேம்பாலத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

இந்தப் புதிய மேம்பாலம் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் குறைப்பதுடன் கனரக வாகனங்கள் சிமாரியா தாமிற்கு செல்வதற்கான சாலைக் கட்டமைப்புகளை மேம்படுத்த உதவிடும்

கயா-தில்லி இடையேயான அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை மற்றும் வைசாலி – கொடர்மா இடையே புத்த சமய சுற்றுலா ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்

கொல்கத்தாவில் 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

கொல்கத்தாவில் புதிய வழித்தடங்களில் அமைக்கப்பட்டுள்ள

Posted On: 20 AUG 2025 3:02PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை மறுநாள் (22.08.2025) பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பீகார் மாநிலம் கயாவில் காலை 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அவர் இரண்டு ரயில் சேவைகளையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இதனையடுத்து, கங்கை நதியின் மேல் அமைக்கப்பட்டுள்ள அவுண்டா – சிமாரியா மேம்பாலத்தை பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.

கொல்கத்தாவில் மாலை 4.15 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வழித்தடத்தில் மெட்ரோ ரயில்  சேவைகளை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைப்பதுடன் ஜெசோர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஜெய்ஹிந்த் பிமான் பந்தர் ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணிக்கிறார். மேலும், கொல்கத்தாவில் 5,200 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார்.

பீகாரில் பிரதமர்

போக்குவரத்துக்கான இணைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி, காலை 8.15 மணிக்கு கங்கை நதியின் மேல் தேசிய நெடுஞ்சாலை எண் 31-ல் 1.86 கிலோ மீட்டர் நீளத்திற்கு 6 வழிச்சாலையாக 1,870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அவுண்டா – சிமாரியா மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். இது பாட்னாவில் உள்ள முகாமா பெகுசராய் இடையே நேரடி போக்குவரத்துக்கான இணைப்பை வழங்குகிறது. பின்னர் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்தப் புதிய மேம்பாலம் ஏற்கனவே பாழடைந்து மோசமான நிலையில் உள்ள ரயில் மற்றும் சாலை மேம்பாலமாக இருக்கும் ராஜேந்திர சேட் என்ற மேம்பாலத்திற்கு மாற்றாக அதன் அருகிலேயே கட்டப்பட்டுள்ளது.  இந்தப் புதிய மேம்பாலம், வடக்கு பீகார் (பெகு ராய்), சுபாவுல், மதுபனி, புர்னியா, அராரியா) – தெற்கு பீகார் (ஷேக் புராடு நவாடா, லக்கிசராய்) இடையே கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கான 100 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமான பயண தூரத்தைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தின் பிற பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், கனரக வாகனங்களின் நீண்ட தூர பயணத்தைக் குறைக்கும் வகையிலும் இந்தப் புதிய  மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

மூலப் பொருட்களைக் கொண்டு வருவதில் ஜார்க்கண்ட் மற்றும் தெற்கு பீகார் பகதிகளை சார்ந்திருக்கும் நிலை இருப்பதால் வடக்கு பீகார் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைக் கட்டமைப்புகள், பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். புகழ் பெற்ற சிமாரியா தாம் செல்லும் யாத்ரீகர்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை அளிப்பதுடன் பிரபலமான  பாடலாசிரியர், மறைந்த  ராம்தாரி சிங் திங்கரின் பிறந்த இடத்திற்கு செல்லவும் உதவுகிறது.

பக்தியர்பூர் – மொகாமா இடையே, தேசிய நெடுஞ்சாலை 31-ல் 1,900 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தச் சாலை இப்பகுதிகளுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதுடன்  போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புதிய பொருளாதார  வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கவும் உதவிடும்.

பீகாரில் மின்சாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் வகையில், 6,880 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பக்சர் அணுமின் நிலையத்தை (660 மெகாவாட்) பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது மின் உற்பத்தித் திறனைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படுத்துவதுடன் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், அப்பகுதிகளில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

சுகாதார உள்கட்டமைப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், முசாஃபர்பூரில்,  ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைக்கிறார். இந்த மையம் வெளிப்புற மற்றும் உட்புற புற்று நோயாளிகளுக்கான நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை மையங்கள், மேம்பட்ட ஆய்வகங்கள், ரத்த வங்கி மற்றும் 24 படுக்கை வசதிகளுடன் கூடிய அவசரகால சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன. பீகாரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவ மையம், அண்டை மாநிலங்களிலிருந்து தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ள பெருநகர மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்வதற்கான பயண நேரத்தையும் குறைக்க உதவிடும்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கங்கை நதியில், தூய்மையைப் பராமரிப்பது மற்றும் தண்ணீர் தடையின்றி செல்வதை உறுதி செய்யும் வகையிலும், அமைக்கப்பட உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் 520 கோடி ரூபாய் செலவில், நவாமி கங்கா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும்  கழிவுநீர்ப் பாதைகளுக்கான கட்டுமானப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது கங்கை நதி மாசடைவதைத் தடுக்கும் வகையிலும், அப்பகுதியில் துப்புரவுப்பணிகளை மேம்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

1,260 கோடி ரூபாய் செலவிலான நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அவுரங்காபாதில்  தௌட்நகர் மற்றும் ஜெகன்னாபாதில் கழிவுநீர் கட்டமைப்புப் பணிகளும் அடங்கும். ஜமுய் மற்றும் லக்சிசராயில் உள்ள பராகியாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் மாற்றுப்பதை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும். அம்ருத் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், அவுரங்காபாத், புத்தகயா, ஜெகன்னாபாத் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.  இந்தத் திட்டங்கள் சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதுடன் நவீன கழிவு நீர் அகற்றும் முறைகளும் மேம்படுத்தப்பட்டு இப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்தும் வகையில் துப்புரவு வசதிகளையும் வழங்கும்.

இப்பகுதியில் போக்குவரத்துக்கான இணைப்பை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு புதிய ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். கயா – தில்லி இடையே அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை, ரயில் பயணிகளுக்கு நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. புத்த கயாவிற்கு சுற்றுலா செல்லும் வகையில், வைசாலி மற்றும் கொடர்மா இடையே ரயில் சேவையைத் தொடங்குவதன் மூலம் இப்பகுதியில் உள்ள முக்கிய புத்தத் தளங்களில் சுற்றுலா மற்றும் மதம் சார்ந்த பயணத்தை ஊக்குவிக்க உதவிடும்.

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 12,000 கிராமப்புற பயனாளிகளுக்கும், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 4,260 பயனாளிகளுக்கும் புதிய வீடுகளுக்கான சாவிகளை வழங்கும் கிரகப்பிரவேச நிகழ்ச்சிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் சொந்த வீடு எனும் கனவு நிறைவேறும்.

மேற்கு வங்கத்தில் பிரதமர்

உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளுடன் நகர்ப்புற போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவைகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். 13.61 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய மெட்ரோ வழித்தடத்தில் புதிய மெட்ரோ ரயில் சேவைகளை அவர் தொடங்கி வைக்கிறார். பின்னர், ஜெசோ சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்லும் அவர், நொவாப்பாரா – ஜெய்ஹிந்த் பிமான் பந்தர் மெட்ரோ ரயில் சேவையை, ஜெசோ சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி வைக்கிறார். மேலும், ஷீல்டா  - எஸ்ப்ளனேடு மற்றும் பெலிகத்தா – ஹெமந்தா முக்காபாத்தியாயா மெட்ரோ ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து ஜெசோ சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஜெய்ஹிந்த் பிமன் பந்தர் மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணம் செய்து ஜெசோ ரயில் நிலையத்திற்கு திரும்புகிறார்.

பின்னர் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், ஹவுரா மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ வழித்தடங்களை தொடங்கிவைக்கிறார். நொவாப்பாரா – ஜெய்ஹிந்த் பிமன் பந்தர்  இடையேயான மெட்ரோ ரயில் சேவை,  அங்குள்ள விமான நிலையத்திற்கு எளிதில் செல்ல வகை செய்கிறது.   ஷீல்டா – எஸ்ப்ளனேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை, பயண நேரத்தை 40 நிமிடத்திலிருந்து 11 நிமிடமாகக் குறைக்கிறது. பெலிகத்தா – ஹெமந்தா முக்காபாத்தியாயா இடையேயான மெட்ரோ ரயில் நிலையங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் முக்கிய ரயில் நிலையங்களாக உள்ளன. இந்தப் புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்கள் கொல்கத்தாவில் பரபரப்பான பகுதிகளுக்கு இடையே போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதுடன் பயண நேரத்தையும் வெகுவாக குறைக்க உதவுகிறது. இந்தப் புதிய ரயில் சேவைகள், அன்றாடம் லட்சக்கணக்கான ரயில் பயணிகளுக்கு பல்தட போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இப்பகுதியில் சாலைக் கட்டமைப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில்  1,200 கோடி ரூபாய் செலவில், 7.2 கிலோமீட்டர் தொலைவிற்கு 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள கோனா விரைவுச் சாலைக்கான கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர்  அடிக்கல் நாட்டுகிறார். இது ஹவுரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகள் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு சாலைப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இப்பகுதியில் சுற்றுலா வர்த்தகம், போன்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கும் உத்வேகம் அளிப்பதுடன் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்க உதவிடும்.

***

(Release ID: 2158337)

AD/SMB/SV/KPG/AG/DL


(Release ID: 2158548)