பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கிஷ்த்வாரில் மேக வெடிப்பு, வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன் பேச்சு

Posted On: 15 AUG 2025 12:12PM by PIB Chennai

கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பு, வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா மற்றும் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா ஆகியோருடன் பேசினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பு, வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து ஜம்மு - காஷ்மீர் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா ஆகியோரிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அலுவலர்கள் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்."

***

(Release ID: 2156740)

AD/PLM/RJ


(Release ID: 2156961)