நிதி அமைச்சகம்
சரக்கு மற்றும் சேவை வரி நாட்டிற்கு பெரும் பயனளித்து குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாக எவ்வாறு விளங்குகிறது என்பதை 79-வது சுதந்திர தினத்தில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்
Posted On:
15 AUG 2025 10:51AM by PIB Chennai
கடந்த 2017 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), நாட்டிற்கு பயனளிக்கக்கூடிய குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாக எவ்வாறு திகழ்கிறது என்பதை 79-ஆவது சுதந்திர தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.
சாமானிய மக்கள், விவசாயிகள், நடுத்தர வகுப்பினர் மற்றும் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரும் நிவாரணத்தை அளித்துள்ள ஜிஎஸ்டி-ன் கீழ் அமைந்துள்ள அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
‘தற்சார்பு இந்தியாவை’ கட்டமைக்க ஜிஎஸ்டி-ல் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை மத்திய அரசு முன்மொழிந்து வருகிறது. கட்டமைப்பு சீர்திருத்தங்கள், விகித சீரமைப்பு மற்றும் எளிதான வாழ்க்கை ஆகிய மூன்று முக்கிய தூண்களில் இது கவனம் செலுத்தும்.
ஜிஎஸ்டி விகித சீரமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த முன்மொழிவுகளை, ஜிஎஸ்டி கவுன்சிலால் நிர்மாணிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவிற்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. சாமானிய மக்கள், பெண்கள், மாணவர்கள், நடுத்தர வகுப்பினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் நலனுக்காக வரி விகிதங்களின் சீரமைப்பு போன்றவை, அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தங்களில் கண்டறியப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாகும்.
கூட்டுறவு கூட்டாட்சி உணர்வுடன், மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பிரதமர் திரு திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையான அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்காக வரும் வாரங்களில் மாநிலங்களுடன் பரவலான ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உள்ளடக்கிய வளர்ச்சி, வலிமையான பொருளாதாரம், நாடு முழுவதும் எளிதான வர்த்தகம் மேற்கொள்வதை மேம்படுத்துதல் முதலியவற்றுக்கு ஆதரவளிக்கும் எளிமையான, நிலையான மற்றும் வெளிப்படையான வரி அமைப்புமுறையாக ஜிஎஸ்டியை உருவாக்குவதில் தனது உறுதிப்பாட்டை மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2156708
***
AD/RB/RJ
(Release ID: 2156778)
Read this release in:
Marathi
,
Gujarati
,
Assamese
,
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam