பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிபு சோரன் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 04 AUG 2025 10:21AM by PIB Chennai

சிபு சோரன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  பழங்குடியின மக்கள், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவு மக்கள் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

“திரு சிபு அவர்கள் அடித்தட்டு மக்கள் மற்றும் விளிம்பு நிலை  மக்களுக்காக அரும்பாடுபட்டு அம்மக்களுக்கான தலைவராக உயர்ந்தவர். குறிப்பாக ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்கள், பழங்குடியின சமுதாயங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அவர் பாடுபட்டார், அவரது மறைவு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஜார்கண்ட் முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரனைத் தொடர்பு கொண்டு இரங்கலைத் தெரிவித்தேன்.  ஓம் சாந்தி

   ***


(Release ID: 2152017

AD/SV/KPG/KR


(Release ID: 2152056)