தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
வடகிழக்குப் பகுதி இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் இலவச விஎஃப்எக்ஸ் மற்றும் அனிமேஷன் பயிற்சியை வழங்குகிறது என்எஃப்டிசி
Posted On:
02 AUG 2025 11:05AM by PIB Chennai
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC-என்எஃப்டிசி), இந்தியாவின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த ஆர்வமுள்ள இளைர்களுக்காக பிரத்தியேகமாக 3டி அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் (VFX -விஎஃப்எக்ஸ்) துறையில் முழுமையான உறைவிடப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்குகிறது.
இந்த திட்டத்தில் சேர, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ஜூன் 2025 நிலவரப்படி குறைந்தது 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். இந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்தவுடன், அனைத்து பங்கேற்பாளர்களும் என்எஃப்டிசி, தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCVET) ஆகியவை கூட்டாக வழங்கும் சான்றிதழைப் பெறுவார்கள்.
குறைந்தபட்சம் 12-ம் வகுப்புத் தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொடர்புடைய துறையில் குறைந்தது மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ₹1,180 (வரிகளை உள்ளடக்கியது) பொருந்தும். ஆர்வமுள்ள நபர்கள் www.nfdcindia.com என்ற அதிகாரப்பூர்வ என்எஃப்டிசி இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது https://skill.nfdcindia.com/Specialproject என்ற பிரத்யேக பதிவு போர்ட்டலுக்கு நேரடியாகச் செல்வதன் மூலமோ இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15, 2025 ஆகும் . விண்ணப்ப செயல்முறை தொடர்பான கேள்விகள் அல்லது விவரங்களுக்கு, வேட்பாளர்கள் skillindia@nfdcindia.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டுப் பல்வேறு மதிப்பீடுகள் மூலம் இப்பயிற்சிக்கு 100 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பயிற்சித் திட்டம் உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.
***
(Release ID: 2151669)
AD/PLM/RJ
(Release ID: 2151697)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam