பிரதமர் அலுவலகம்
மேக்நாத் தேசாய் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
29 JUL 2025 10:44PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, புகழ்பெற்ற சிந்தனையாளரும், எழுத்தாளரும், பொருளாதார நிபுணருமான மேக்நாத் தேசாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
“சிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், பொருளாதார நிபுணருமான மேக்நாத் தேசாய் ஜி-யின் மறைவால் மனவேதனை அடைந்தேன். அவர் எப்போதும் இந்தியா மற்றும் நாட்டின் கலாச்சாரத்துடன் இணைந்திருந்தார். இந்தியா-இங்கிலாந்து நாடுகள் இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதிலும் அவரது பங்களிப்பு உள்ளது. எங்களுடனான விவாதங்களில் அவர் பகிர்ந்து கொண்ட மதிப்புமிக்க நுட்பமான சிந்தனைகளை அன்புடன் நினைவு கூர்வேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.”
***
(Release ID: 2149996)
AD/SV/KR
(Release ID: 2150196)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam