பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எண்ணெய் கண்டுபிடிப்புக்கு முதல் முறையாக கடலில் 5000 மீட்டர் ஆழம் வரை துளையிடும் நடவடிக்கைகள்: ஹர்தீப் சிங் பூரி தகவல்
Posted On:
29 JUL 2025 3:49PM by PIB Chennai
எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில், குறிப்பாக கடல் பகுதிகளில், புதுப்பிக்கப்பட்ட எழுச்சியைக் காண்கிறது இந்தியா. இது நாட்டின் பயன்படுத்தப்படாத ஹைட்ரோகார்பன் திறனை சுட்டிக்காட்டுகிறது. மாநிலங்களவையில் கேள்விஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2022-ம் ஆண்டில் ஏறத்தாழ ஒரு மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆய்வைத் தொடங்குவது ஒரு மைல்கல் வளர்ச்சியாகும் என்றார்.
2015-ம் ஆண்டு முதல், இந்தியாவில் செயல்படும் ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் 172 ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்துள்ளன. அவற்றில் 62 கடல் பகுதிகளில் உள்ளன என்று கூறிய அமைச்சர் அந்தமான் நிக்கோபார் படுகைகளின் சந்திப்பில் அமைந்துள்ள படுகையின் புவியியல் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், ஆயில் இந்தியா லிமிடெட் ஆகியவை அந்தமான் ஆழ்கடல் பகுதியில் லட்சிய ஆய்வு பணிகளைத் தொடங்கியுள்ளன. முதல் முறையாக, துளையிடும் நடவடிக்கைகள் 5000 மீட்டர் ஆழத்தை இலக்காகக் கொண்டுள்ளன. இதுவரையிலான ஆய்வு முடிவுகளின் கண்ணோட்டத்தை வழங்குகையில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் 20 தொகுதிகளில் ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும், 75 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய்க்கு சமமான படிமம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதில் 9.8 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் 2,706.3 மில்லியன் கன மீட்டர் எரிவாயு இருப்பு உள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149686
***
(Release ID: 2149686)
AD/SMB/DL
(Release ID: 2149983)
Read this release in:
Urdu
,
English
,
Hindi
,
Nepali
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam