பிரதமர் அலுவலகம்
ஃபிடே மகளிர் உலக செஸ் சாம்பியன் 2025 போட்டியில் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
28 JUL 2025 6:18PM by PIB Chennai
ஃபிடே மகளிர் உலக செஸ் சாம்பியன் 2025 போட்டியில் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொனேரு ஹம்பியும், இப்போட்டி முழுவதும் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள திரு மோடி, இரு வீராங்கனைகளின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“இரண்டு சிறந்த இந்திய செஸ் வீராங்கனைகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டி!
2025-ம் ஆண்டு ஃபிடே மகளிர் உலக செஸ் சாம்பியன் ஆனதில் இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கிற்கு பெருமை. இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்கு அவருக்கு வாழ்த்துகள், இது பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்.
கொனேரு ஹம்பியும் போட்டி முழுவதும் அபாரமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இரு வீராங்கனைகளுக்கும் அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”
***
(Release ID: 2149395)
AD/IR/RJ/DL
(Release ID: 2149424)
Read this release in:
Malayalam
,
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada